முளைகட்டிய பயறு சாலட்

Sudha Rani
Sudha Rani @cook_16814003
Coimbatore

முளைகட்டிய பயறு சாலட்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 1 கப் முளைகட்டிய பயறு
  2. 1/4 கப் நறுக்கிய வெங்காயம்
  3. 1/2 கப் மாதுளை முத்துக்கள்
  4. 1/4 கப் வெள்ளரிக்காய்
  5. 2 ஸ்பூன் துருவிய கேரட்
  6. 1/4 ஸ்பூன் மிளகுத்தூள்
  7. 2 சிட்டிகை சாட்மசாலா தூள்
  8. சிறிது இந்து உப்பு (காலா நமக்)
  9. 1 ஸ்பூன் லெமன் சாறு
  10. சிறிது கொத்தமல்லி தழை

சமையல் குறிப்புகள்

  1. 1

    கருப்பு சுண்டல் பட்டாணி தட்டபயிறு சோயா பீன்ஸ் மொச்சைக் கொட்டை இப்படி விரும்யிய பயறுகளை எட்டு மணி நேரம் வரை ஊறவிட்டு பின் சுத்தமான துணியில் கட்டி வைக்கவும்

  2. 2

    சூரிய ஒளி படும் வகையில் சமையல் அறையில் வைத்தால் நன்றாக முளைப்பு வரும்

  3. 3

    பின் அதை தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வேகவைத்து எடுக்கவும்

  4. 4

    அகலமான பாத்திரத்தில் முதலில் லெமன் சாறு விட்டு அதில் இந்து உப்பு மற்றும் சாட் மசாலா தூள் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  5. 5

    பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் துருவிய கேரட் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  6. 6

    பின் வேகவைத்த பயறு வகைகள் மற்றும் மாதுளை முத்துக்கள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  7. 7

    பின் நறுக்கிய கொத்தமல்லி தழை மற்றும் பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  8. 8

    பயறை சூடாக இருக்கும் போது மற்றதை கலந்து சுடச்சுட பரிமாறவும்

  9. 9

    சூடான ஆரோக்கியமான சாலட் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudha Rani
Sudha Rani @cook_16814003
அன்று
Coimbatore

Similar Recipes