கீரைவகை உணவு சிறுக்கீரை மசியல்

சிறுக்கீரை மசியல் 8 மாத குழந்தை முதல் பெரியவர்கள் வரை உண்ணலாம்..
கீரையை பொடியாக நறுக்கி இரண்டு முறை தண்ணீரில் அலசி கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம்,பூண்டு,வரமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். கீரை சேர்த்து லேசாக வதக்கி தண்ணீர் சேர்த்து2 விசில் வைக்கவும். விசில் சத்தம் நின்றதும்,விசிலை தூக்கி ப்ரஷர் ரிலீஸ் செய்தவும். இவ்வாறு செய்தால் கீரை நிறம் மாறாது. நன்கு ஆறியதும் கல் சட்டி அல்லது மிக்ஸியில் அரைக்கவும். குழந்தைகளுக்கு செய்யும் போது வர மிளகாய் சேர்க்க வேண்டாம். தாளிக்க சிறிது எண்ணெய் ஊற்றி பெருங்காயம்,வடகம் போட்டு கீரையில் சேர்த்து கொள்ளவும்.
கீரைவகை உணவு சிறுக்கீரை மசியல்
சிறுக்கீரை மசியல் 8 மாத குழந்தை முதல் பெரியவர்கள் வரை உண்ணலாம்..
கீரையை பொடியாக நறுக்கி இரண்டு முறை தண்ணீரில் அலசி கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம்,பூண்டு,வரமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். கீரை சேர்த்து லேசாக வதக்கி தண்ணீர் சேர்த்து2 விசில் வைக்கவும். விசில் சத்தம் நின்றதும்,விசிலை தூக்கி ப்ரஷர் ரிலீஸ் செய்தவும். இவ்வாறு செய்தால் கீரை நிறம் மாறாது. நன்கு ஆறியதும் கல் சட்டி அல்லது மிக்ஸியில் அரைக்கவும். குழந்தைகளுக்கு செய்யும் போது வர மிளகாய் சேர்க்க வேண்டாம். தாளிக்க சிறிது எண்ணெய் ஊற்றி பெருங்காயம்,வடகம் போட்டு கீரையில் சேர்த்து கொள்ளவும்.
சமையல் குறிப்புகள்
- 1
கீரையை பொடியாக நறுக்கி இரண்டு முறை தண்ணீரில் அலசி கொள்ளவும்
- 2
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம்,பூண்டு,வரமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். கீரை சேர்த்து லேசாக வதக்கி தண்ணீர் சேர்த்து2 விசில் வைக்கவும்.
- 3
விசில் சத்தம் நின்றதும்,விசிலை தூக்கி ப்ரஷர் ரிலீஸ் செய்தவும். இவ்வாறு செய்தால் கீரை நிறம் மாறாது. நன்கு ஆறியதும் கல் சட்டி அல்லது மிக்ஸியில் அரைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிறுக்கீரை மிளகு பொறியல்
கீரையை பொடியாக நறுக்கி இரண்டு முறை தண்ணீரில் அலசி கொள்ளவும். வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், பூண்டு,வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் கீரை சேர்த்து லேசாக வதக்கவும். மூடி போட்டு 5 நிமிடம் வேக வைக்கவும்.தண்ணீர் சேர்க்க கூடாது, கீரை நிறம் மாறாமல் வேக வைக்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து இறக்கவும்.. San Samayal -
சௌ சௌ சட்னி
சௌ சௌ வை தோல் நீக்கிவிட்டு துண்டு துண்டாக நறுக்கி வைக்கவும்.ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.. எண்ணெய் காய்ந்ததும் உளுந்து சேர்த்து வறுக்கவும்.பின்னர் வர மிளகாய்,பூண்டு,வெங்காயம், புளி, தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.நறுக்கிய சௌ சௌ சேர்க்கவும். மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.. சௌ சௌ வேக 5 நிமிடம் மூடி வைக்கவும்.. San Samayal -
அரைக்கீரை தேங்காய் பொரியல்
அரைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். தண்ணீரில் நன்கு அலசவும். வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு, பூண்டு,வரமிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் கீரையை சேர்த்து லேசாக வதக்கவும். மூடி போட்டு வேக விடவும். தண்ணீர் சேர்க்க கூடாது. வெந்ததும் தேவையான அளவு உப்பு மற்றும் தேங்காய் சேர்த்து 1 நிமிடம் கிளறி இறக்கவும். San Samayal -
காலை உணவு. வலிமை தரும் முடக்கத்தான் தோசை (Mudakkathaan dosai recipe in tamil)
2 உழக்கு இட்லி அரிசி, 1/4 உழக்கு கடலைப்பருப்பு, தண்ணீர் ஊற்றி 4 மணிநேரம் ஊறவிடவும். பின் நீரை வடிகட்டி 7 வரமிளகாய், சுத்தம் செய்த முடக்கத்தான் கீரை ஒரு கைப்பிடி, ஒரு துண்டு கட்டி பெருங்காயம், தேவையான அளவு உப்பு, 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி அரைக்கவும். தோசைமாவு பதத்தில் இருக்க வேண்டும். தோசைக்கல்லில் மாவு ஊற்றி, தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி சுடவும். #GA4 ஒSubbulakshmi -
கொத்தமல்லி கார சட்னி #சட்னி&டிப்ஸ்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.பின்னர் வர மிளகாய்,பூண்டு,வெங்காயம் சேர்ந்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் தக்காளி,புளி, உப்பு சேர்த்து வதக்கவும்.கடைசியாக கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைக்கவும்.. நன்கு ஆறவைத்து அரைக்கவும்.தாளிக்க 1 tsp எண்ணெய் விட்டு,கடுகு, சீரகம்,வர மிளகாய் சேர்த்து சட்னியில் சேர்க்கவும்..சுவையான கொத்தமல்லி கார சட்னி தயார்.. San Samayal -
வடக தேங்காய் குழம்பு (Vadaka thenkaai kulambu recipe in tamil)
#coconutஎங்கள் மாமியார் வீட்டு பக்கதார் வழக்கமாக அடிக்கடி செய்யும் புளி குழம்பு இது.இந்த கறி வடகம் எங்கள் பக்கத்து ஸ்பெஷல்.வெயில் காலம் வந்தால் நிறைய செய்து சேமித்து வைத்து கொள்வார்கள்.இதில் நெய் சேர்த்து சூடான சத்தத்துடன் கை குழந்தைகளுக்கு ஊட்டி விடுவோம். நாமும் சிறிது உப்பு சேர்த்து நெய் மற்றும் இந்த வடகத்தை பொரித்து சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.மேலும் தக்காளி பருப்பு சாம்பார்,மாங்காய் சாம்பார்,கீரை போன்றவற்றில் வறுத்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.இந்த வடகம் உளுந்து சின்ன வெங்காயம்,சீரகம் போன்ற பொருட்களை கொண்டு செய்ய வேண்டும்.இந்த வடக ரெசிபி வேண்டுபவர் Bk recipies பார்த்து தெரிந்து கொள்ளவும். நான் ஒருமுறை அவர்கள் வெளி யிட்டு இருந்ததை பார்த்தேன்.இதை நாங்கள் கறி வடகம் என்று சொல்வோம். Meena Ramesh -
வடியாலா வங்காய் புலுசு (Vatiyala vankaya pulusu recipe in tamil)
#ap வடகம் கத்தரிக்காய் புளிக்குழம்பு ஆந்திரா ஸ்டைல் Siva Sankari -
கீரை குழம்பு (Keerai kulambu recipe in tamil)
#arusuvai2 எந்த கீரையிலும் பருப்பு சேர்த்து குழம்பு வைக்கலாம். இது அரைக்கீரையில் செய்த பருப்பு குழம்பு. எப்போதும் கீரைக்கூட்டு கீரை பொரியல் கீரை மசியல் கீரை கடைசல் என்று செய்வதை தவிர்த்து ஒருமுறை இப்படி செய்து பார்க்கலாம். Meena Ramesh -
பருப்பு கீரை மசியல்
#nutritionபருப்பு கீரை உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. இதனால் வேர்க்குரு கட்டி வருவதை தடுக்கும்.இதில் நார் சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் வராமல் தடுக்கும். ஒமேகா 3 விட்டமின் டி இருப்பதால் இரத்த கொதிப்பு வராமல் தடுக்கும்.m p karpagambiga
-
தேவையான பொருட்கள்:
செய்முறை: குக்கரில் பாசிப்பருப்பை போட்டு, அதில் மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து பருப்பை மசித்துக் கொள்ள வேண்டும்.பின்பு கீரையை நீரில் ஒருமுறை அலசி, குக்கரில் உள்ள பருப்புடன் சேர்த்து, அடுப்பில் வைத்து கீரையை வேக வைக்க வேண்டும். அதே சமயம், ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, பின் குக்கரில் உள்ள கீரையை பருப்புடன் சேர்த்து வாணலியில் ஊற்றி, கொதிக்க விட வேண்டும். karthisuresh24@gmail.com -
-
பீர்க்கங்காய் தக்காளி சட்னி (Peerkangaai Thakaali Chutney recipe in tamil)
#GA4#Tomato#Week7பீர்க்கங்காயை தக்காளியுடன் சேர்த்து வதக்கி அரைத்த சட்னி. இந்த சட்னி மிகவும் சுவையாக இருந்தது. பீர்க்கங்காயை தனியாக சமைத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். அதனால் இவ்வாறு சட்னி உடன் சேர்த்து வைத்துக் கொடுத்தால் எல்லோரும் சாப்பிடலாம்.Nithya Sharu
-
வீட்டிலேயே மசால் வடை சூப்பரா செய்யலாம் வாங்க
கடலைப்பருப்பை மூன்று மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். ஒரு மிக்ஸியில் 6 பல் பூண்டு 4 பல் இஞ்சி காய்ந்த மிளகாய் 1 கருவேப்பிலை சிறிதளவு ஒரு மேசை கரண்டி சோம்பு சேர்த்து நர நர என்று அரைத்து கொள்ளவும் பிறகு அதில் ஒரு சிறிய துண்டு பட்டை மற்றும் ஊற வைத்த கடலை பருப்பை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்து கொள்ளவும் பிறகு அந்த கலவையில் ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவும் பிறகு மல்லி தழை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்த கலவையை உருண்டையாக தட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மசால் வடை ரெடி..உண்டு மகிழுங்கள் Mohamed Aahil -
மதிய உணவு சாதம்,சாம்பார், கருணைக்கிழங்கு மசியல், அரைக்கீரைப் பொரியல்
சாதம் வடிக்க.முருங்கை து.பருப்பு வேகவைத்து தக்காளி,வெங்காயம், ப.மிளகாய் சாம்பார் பொடி போட்டு உப்பு போட்டு கொதிக்க விட்டு கடுகு,உளுந்து, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து கலக்கவும். கீரை வெங்காயம் பொடியாக வெட்டி கடுகு ,உளுந்து ,தாளித்து ,வரமிளகாய் வறுத்து வெங்காயம் வதக்கவும். கீரை உப்பு சீரகம் போடவும்.கருணை வேகவைத்து தோல் உரித்து வெங்காயம் ,வரமிளகாய் ,கடுகு,பெருங்காயம் தாளித்து கிழங்கை பிசைந்து மிளகாய் பொடி,உப்பு, போட்டு நல்லெண்ணெய் ஊற்றி கிண்டவும் ஒSubbulakshmi -
பாரம்பரிய மண்பானை மீன் குழம்பு
முதலில் புளியை நன்கு கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்..மிக்ஸியில் வெங்காயம்,கருவேப்பிலை கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும். அடுத்து தக்காளியும் அரைத்து கொள்ளவும். பூண்டு நன்கு தட்டி கொள்ளவும்.இப்போது மண்பானை வைத்து நல்லென்னை ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு,சீரகம், வெந்தயம்,இடித்து வைத்த பூண்டு,பச்சை மிளகாய் சேர்க்கவும். சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். இப்போது அரைத்து வைத்த வெங்காயம்,தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து வதக்கவும். இப்போது புளி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். நன்கு சுண்டி வரும்வரை கொதிக்க விடவும். பின்னர் மீன் சேர்த்தவும்.மீன் வேக 5 நிமிடம் போதும். இறுதியில் சீரக தூள்,வெல்லம் அல்லது நாட்டு சக்கரை சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லி தூவவும்.. சுவையான மண்பானை மீன் குழம்பு தயார்.. San Samayal -
மண்பானை கோழி வறுவல்
நம் பாரம்பரிய உணவு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மண்பானை சமையல்.. அதிலும் மண்பானையில் கோழி வறுவல் செய்தால் அதன் ருசிக்கு அளவே இல்லை..முதலில் ஒரு வானலில் ஏலக்காய், பட்டை, மிளகு,சீரகம்,தனியா,வர மிளகாய் சேர்த்து மிதமான தீயில் வைத்து 2 முதல் 3 நிமிடம் வரை வறுக்கவும்.நன்கு ஆறவைத்து பின்னர் அரைக்கவும்.இப்போது ஒரு மண்பானையில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்க்கவும்.பின்னர் நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.வெங்காயம் நன்கு வதங்கியதும் சிக்கன் துண்டுகளை போட்டு நன்றாக வதக்கவும்.தேவையான அளவு உப்பு,மஞ்சள் தூள்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்பின்னர் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும், மூடி போட்டு 10 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை.சிக்கன் நன்றாக வெந்ததும் சீரக தூள் சேர்க்கவும்..கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.. சுவையான மண்பானை கோழி வறுவல் தயார்.. San Samayal -
புடலங்காய் துவட்டல்
#நாட்டு காய்கறி உணவுகள்1.முதலில் புடலங்காயை முழுதாக கழுவி நைசாக நறுக்கி வைத்து கொள்ளவும். நறுக்கிய பிறகு கழுவினால் பாதி சத்து தண்ணீரில் போய்விடும்.2.வெங்காயத்தை தோலுரித்து நன்கு பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். வரமிளகாய் இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.3.துவரம் பருப்பை ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து முக்கால் பதமாக வேகவைத்து தண்ணீர் வடித்து வைக்கவும். தேங்காய் துருவல், கறிவேப்பிலை எடுத்து வைத்து கொள்ளவும்.4.ஒரு எண்ணெய் சட்டி அல்லது கடாயில் 2 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றி காய விடவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து போட்டு நன்கு வெடிக்க விடவும். பிறகு கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு சிறிது வதக்கவும்5.நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். நன்கு சிம்மில் வைத்து 3 நிமிடங்கள் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய புடலங்காயை சேர்க்கவும்.6.புடலங்காயை தாளிதத்துடன் நன்கு கிளறி விடவும். பிறகு உப்பு சேர்க்கவும்7.மீண்டும் கிளறி மூடி வைக்கவும். 5 நிமிடம் அடுப்பை சிம்மில் வைக்கவும். மீண்டும் கிளறிவிட்டு மூடி 5 நிமிடம் வைக்கவும்.8.ஐந்து நிமிடம் கழித்து பிறகு நன்கு கிளறி விடவும். இப்போது காய் நன்கு வெந்து இருக்கும். இதில் வேக வைத்த பருப்பை சேர்த்து கிளறி தேங்காய் துருவல் சேர்த்து கிளறி விடவும்9.புளி குழம்பு, வத்த குழம்பு, மீன் குழம்பு இவைகளுக்கு ஏற்ற சைட் டிஸ்... புடலங்காய் இளம் பச்சை நிறத்திலும், கறிவேப்பிலை கரும்பச்சை நிறத்திலும், பருப்பு மஞ்சள் நிறத்திலும், தேங்காய் பூ வெள்ளை நிறத்திலும் பார்க்க கலர்புல்லா இருக்கும். சத்து மிகுந்தது. Laxmi Kailash -
பண்ணைக்கீரை தொய்யக்கீரை கீரை மசியல்
#myfirstrecipe உடலுக்கு வலிமை சேர்க்கும் பசியை தூண்டும் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளை சரிசெய்யும் Prabha Muthuvenkatesan -
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#Ga4 #week12 இப்போது பனி காலம் தொடங்கி விட்டதால் சீசனல் கோல்ட் வர வாய்ப்பு உள்ளது ஆகையால் வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் உணவுடன் எடுத்துக் கொள்வது நல்லது. Siva Sankari -
பண்ணைக்கீரை தொய்யக்கீரை கீரை மசியல்
#myfirstrecipe உடலுக்கு வலிமை சேர்க்கும் பசியை தூண்டும் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளை சரிசெய்யும் Prabha muthu -
முளைக்கீரை துவையல் (Mulaikeerai thuvaiyal recipe in tamil)
முளைக் கீரை சட்னி. இலங்கை முறையிலான ஆரோக்கியமான கீரை சட்னி. வல்லாரைக்கீரை பொன்னாங்கண்ணிக் கீரை இவைகளிலும் இதேபோல் செய்ய முடியும். #chutny Pooja Samayal & craft -
வடக தொகையல்
#Lockdown#Bookகடைகள் இப்போது எங்கும் இல்லாததால் அத்தியாவசியத் தேவைகளில் கொஞ்சம் சிரமம் இருக்கிறது. வெயில் காலங்களிலேயே நாங்கள் வத்தல், வடகம், மாவடு அனைத்தும் போட்டு சேமித்து வைத்து விடுவோம். அது இப்போது கை கொடுக்கிறது. வடகம் அதாவது தாளிதப் பொருட்களை எல்லாம் சேர்த்து விளக்கெண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நன்கு உருண்டைகளாக பிடித்து வெயிலில் காய வைத்து டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளவும் இது ஒரு வருடம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். இதை வைத்து பல உணவுகள் தயாரிக்கலாம் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. நான் இதை வைத்து ஒரு தொகையல் செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது பழைய சாதம், மோர் சாதம் இதற்கு நல்ல சைட் டிஷ். Laxmi Kailash -
சிவப்பு பசலைக்கீரை மசியல்
#momகொடிப்பசலை கீரையின் பூர்வீகம் அமெரிக்கா. பின்னர் ஆப்பிரிக்கா, இந்தியாவுக்கு பரவியது. இது கொடியாக படரக்கூடியது. மிகுந்த மருத்துவ குணம் கொண்ட இந்த கீரைக்கு உணவியல் நிபுணர்கள் முதல் இடைத்தை கொடுத்துள்ளார். அதிக இரும்பு சத்து, வைட்டமின் சத்துக்கள் உள்ளது. இரத்த அணுக்களுக்கு சிவப்பு கலர் வர உதவும். அடிக்கடி உணவில் சேர்க்க எல்லா சத்துக்களும் கிடைக்கும். Renukabala -
வல்லாரை கீரை சட்னி (Vallarai keerai chutney recipe in tamil)
வல்லாரை கீரை மூளைக்கு மிகவும் பலம் சேர்க்கும் கீரையாகும் நித்யா இளங்கோவன் -
பாலக் கீரை சாம்பார் (Paalak keerai sambar recipe in tamil)
#கீரை வகை உணவுகள்#jan2 Soundari Rathinavel -
வாழைத்தண்டு சூப்
வாழைத்தண்டை சிறிய துண்டுகளாக நறுக்கி மோரை தண்ணீர் உடன்கலந்த கரைசலில் போடவும் குக்கரில் நறுக்கிய வாழைத்தண்டை போட்டு 2 விசில் சத்தம் வரும் வரை வேக விடவும் வாழைத்தண்டு வேக வைத்த தண்ணீரை வடித்து எடுத்து கொள்ளவும் வேக வைத்த வாழைத்தண்டில் முக்கால் பாகத்தை வாழைத்தண்டு வேக வைத்த தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதை வடிகட்டி வாழைதண்டு சாற்றை தனியாக எடுத்து கொள்ளவும் குக்கரில் வெண்ணெய் சேர்த்து சூடாணதும் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும் மீதமுள்ள வேக வைத்த வாழைத்தண்டை சேர்த்து வதக்கவும் பிறகு மிளகு தூள், சீரகத்தூள் சேர்த்து லேசாக வதக்கவும் பின் வடித்து எடுத்த வாழைத்தண்டு சாற்றை ஊற்றிஉப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்பிறகு சோளமாவில் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து அந்த கரைசலை வாழைத்தண்டு சூப் உடன் கலந்து கெட்டியாக (சூப் பதம்) வரும் வரை கொதிக்க விடவும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.. சத்தான வாழைத்தண்டு சூப் தயார் Dhaans kitchen -
#cool மொறு மொறு தோசைக்கு ஏற்ற ஹோட்டல் சுவையில் தக்காளி வெங்காய கார சட்னி 👌👌
செய்முறை முதலில். சின்ன வெங்காயம் சுத்தம் செய்து கழுவி எடுத்து கடாயில் ஆயில் ஊற்றி வதக்கவும் பிறகு பூண்டு வரமிளகாய் மல்லி இழை புளி உப்பு சேர்த்து வதக்கி ஆறியவுடன் மிக்சியில் அரைக்கவும் தோசைக்கு ஏற்ற அற்புதமான சுவையில் தக்காளி வெங்காய கார சட்னி சூப்பர்👌 Kalavathi Jayabal -
அரைத்து விட்ட முருங்கை புளிக்குழம்பு
உளுந்து, மிளகுத்தூள், க.பருப்பு, து.பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, சீரகம், சிறிதளவு,மிளகாய் வற்றல் 4 , வெந்தயம்நன்றாக எண்ணெய் விட்டு வறுத்து நைசா மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, வெந்தயம்,கறிவேப்பிலை வறுத்து வெட்டியமுருங்கைக்காய்,5பூண்டு ப்பல்,5சிறிய வெங்காயம் வதக்கவும். ஒரு பெரிய நெல்லி அளவு புளி அரிசி கழுவிய தண்ணீரில் போட்டு புளித்தண்ணீர் ஊற்றி அரைத்த கலவையை போட்டு நல்லெண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும்.குழம்பு வற்றவும் இறக்கவும். ஒSubbulakshmi -
நோய் வராமல் காக்கும் குழ ம்பு
மிளகு ,சீரகம்,பூண்டு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், பபெருங்காயம் வறுத்து தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும். மீண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து ,,வெந்தயம் வறுத்து புளித்தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கருணைக்கிழங்கு வேகவைத்து வெட்டி போட்டு கொதிக்கவும் இறக்கவும். ஒSubbulakshmi -
காலை உணவு இடியாப்பம் தக்காளி இடியாப்பம் புளிக்காய்ச்சல் இடியாப்பம்
மாவு உப்பு நல்லெண்ணெய் ஊற்றி வென்னீர் கலந்து பிசையவும். இடியாப்பம் பிழியவும். மல்லி, மிளகு, எள்,க.பருப்பு,வ.மிளகாய்2,வெந்தயம்போட்டு வறுத்து தூளாக்கி பின் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி பெருங்காயம் கடுகு உளுந்து வறுத்து புளித்தண்ணீர் கெட்டியாக ஊற்றி உப்பு போட்டு கொதிக்கவும் தூள் 2ஸ்பூன் போட்டு வறுத்த கடலை போடவும்.இதில் இடியாப்பம் பிரட்டி வைக்கவும். புளிக்காய்ச்சல் இடியாப்பம் தயார். கடுகு,உளுந்து, வரமிளகாய், ப.மிளகாய், பெரூங்காயம்,கறிவேப்பிலை தேங்காய் எண்ணெய் விட்டு கடாயில் வறுத்து தக்காளி வெங்காயம் தேவையான உப்பு போட்டு வதக்கவும். பின் இடியாப்பம் போட்டு கிண்டவும்.தேங்காய் துறுவல் போடவும். தக்காளி இடியாப்பம் தயார் ஒSubbulakshmi
More Recipes
கமெண்ட்