வெள்ளை பூசணி தயிர் பச்சடி (Vellai Poosani THayir PAchadi Recipe in Tamil)

Bhuvana Babu
Bhuvana Babu @cook_18507709

வெள்ளை பூசணி தயிர் பச்சடி (Vellai Poosani THayir PAchadi Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5to6 பரிமாறுவது
  1. ஒரு கப்பொடியாக நறுக்கிய வெள்ளைப்பூசணி துண்டுகள்
  2. 4 பச்சை மிளகாய்
  3. அரை மூடிதேங்காய் துருவியது
  4. ஒரு டேபிள்ஸ்பூன்சீரகம்
  5. ஒரு சிறிய துண்டுஇஞ்சி
  6. 2 பல் பூண்டு
  7. தாளிக்க
  8. 2 ஸ்பூன்தேங்காய் எண்ணெய்
  9. கால் ஸ்பூன் கடுகு
  10. சிறிதளவு பெருங்காயத்தூள்
  11. 2 கொத்து கருவேப்பிலை
  12. இரண்டு காய்ந்த மிளகாய் கிள்ளியது

சமையல் குறிப்புகள்

  1. 1

    பொடியாக நறுக்கிய பூசணித் துண்டுகளை சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும் அதில் சிறிது உப்பு சேர்க்கவும் பூசணிக்காய் வெந்த பிறகு அதனை இறக்கி வடிகட்டி தண்ணீரைப் பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    மிக்ஸி ஜாரில் அரைக்க துருவிய தேங்காய் பச்சை மிளகாய் சீரகம் இஞ்சி பூண்டு இவைகளை சேர்த்து நன்றாக மையாக அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    வேக வைத்த பூசணிக்காய் உடன் அரைத்த கலவையை கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்

  4. 4

    ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணை விட்டு அதில் கடுகு கருவேப்பிலை பெருங்காயம் காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து பூசணிக்காய் கலவையில் சேர்க்கவும்

  5. 5

    அரைத்த மசாலா சேர்த்த பூசணிக்காய் கலவையில் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்

  6. 6

    மேலே கொத்துமல்லி அலங்கரிக்கவும்

  7. 7

    இப்பொழுது அருமையான வெள்ளை பூசணி தயிர் பச்சடி தயார்😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Bhuvana Babu
Bhuvana Babu @cook_18507709
அன்று

Similar Recipes