கடலை குருமா

Prasel
Prasel @cook_prasel
Edit recipe
See report
Share
Share

Ingredients

  1. 150 கிராம் கொண்டைக்கடலை
  2. 100 கிராம் உருளைகிழங்கு
  3. 2டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  4. 3டீஸ்பூன் கொத்தமல்லி தூள்
  5. 1டீஸ்பூன் கரம் மசாலா
  6. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 2டீஸ்பூன் மிளகாய் தூள்
  8. 20 சின்ன வெங்காயம்
  9. 3 தக்காளி
  10. 1/2 டீஸ்பூன் கருவேப்பிலை
  11. தேவையானஅளவு உப்பு
  12. அரைப்பதற்கு :
  13. 1 குவளை துருவிய தேங்காய்
  14. 2டீஸ்பூன் மிளகு
  15. 2டீஸ்பூன் சீரகம்
  16. 1/2 துண்டு பட்டை
  17. 2 கிராம்பு
  18. தாளிக்க :
  19. 50 மில்லிலிட்டர் தேங்காய் எண்ணெய்
  20. 1டீஸ்பூன் கடுகு
  21. 1 துண்டு பட்டை
  22. 1டீஸ்பூன் சோம்பு
  23. 2 கிராம்பு

Cooking Instructions

  1. 1

    கருப்பு கொண்டைகடலையை ஒரு நாள் இரவு முழுக்க சுத்தமான நீரில் ஊறவைக்கவும்
    குக்கரில் வேகவைத்து தண்ணீரை வடித்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்

  2. 2

    வேகவைத்த கடலையை தனியே வைக்கவும்
    உருளை கிழங்கை வேகவைத்து தோலுரித்து சிறிய சதுரங்களாக நறுக்கி வைக்கவும்
    இஞ்சி பூண்டு விழுது அரைத்து வைக்கவும்
    தேங்காய், மிளகு, சீரகம், பட்டை மற்றும் கிராம்பு இவற்றை விழுதாக தண்ணீர் சேர்த்து அரைக்கவும்

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் தாளிக்க குடுக்கப்பட்டுள்ள அணைத்து பொருட்களையும் போடு தாளிக்கவும்
    தாளித்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கருவேப்பிலை மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்றாக வணக்கவும்

  4. 4

    பொன்னிறமாகும் வரை வணக்கவும்
    இப்பொழுது பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக மசிந்து வரும் வரை வணக்கவும்
    அதில் மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து எண்ணெய் வெளியே வரும் வரை வணக்கவும்

  5. 5

    இதை வேகவைத்த கொண்டக்கடலை மற்றும் உருளை கிழங்கு சேர்த்து ஒரு முறை கிளறிய பிறகு அதுல வேகவைத்த தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறவும்

  6. 6

    உப்பு சரிபார்க்கவும்
    இதில் அரைத்து வாய்த்த விழுது சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வேகவைக்கவும்
    கொத்தமல்லி தூவி சாதம் அல்லது சப்பாத்தி உடன் பரிமாறவும்

Edit recipe
See report
Share

Cooksnaps

Did you make this recipe? Share a picture of your creation!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Prasel
Prasel @cook_prasel
on

Comments

Similar Recipes