அரிசி மாவு "களி"(riceflour kali recipe in tamil)

#HJ -
பச்சரிசியை வறுத்து ரவை பதத்துக்கு பொடி செய்து செய்வது வழக்கமாக உள்ளது.. நான் பதப்படுத்தின பச்சரிசி மாவை சிவக்க வறுத்து அதை வைத்து களி செய்திருக்கிறேன்...மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நக்ஷத்திரத்தில் இந்த களி செய்து இறைவனுக்கு நிவேதனம் செய்வார்கள்...

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பதப்படுத்தின பச்சரிசி மாவை ஸ்டவ்வில் வெறும் வாணலியில் சிவக்க வறுத்தெடுக்கவும்
- 2
அதே வாணலியில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து எடுத்த பிறகு தேங்காய் துருவல் சேர்த்து கலர் மாறாமல் வறுத்து எடுத்துக்கவும்.
- 3
அடிகனமான பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி சூடானதும் வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும், அத்துடன் தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் சேர்க்கவும்
- 4
நன்கு கொதிக்கிற வெல்ல தண்ணீரில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு, மாவை சேர்த்து மிதமான சூட்டில் கட்டி இல்லாமல் கிளறி வேக விடவும்.
- 5
நன்கு வெந்து பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்பொழுது ஸ்டாவ்வ் ஆப் செய்து குக்கர் மூடி போட்டு மூடி 10 நிமிடம் அப்படியே விட்டு திறந்தால் அருமையான உதிரியான களி தயார்
- 6
மேலாக வறுத்த முந்திரி மற்றும் மீதி நெய் ஊற்றி நன்கு கிளறி விடவும்..... மிக சுவையுடன் அருமையான ஆரோக்கியமான அரிசி மாவு களியை சுவைக்கவும்... இது கூட சேர்த்து சாப்பிட எட்டங்காடி புழுக்கு,(8 விதமான காய், கிழங்கு சேர்த்து பண்ணக்கூடியது கேரளா ஸ்பெஷல்) மற்றும் தாளக குழம்பு பெஸ்ட் காம்பினேஷன்...
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
- இட்லி(idli recipe in tamil)
- தேங்காய்பால் காய் குருமா(coconutmilk veg kurma recipe in tamil)
- முளைகட்டிய பச்சை பயிறு மற்றும் முழு கருப்பு உளுந்து(sprouted greengram and black dal in tamil)
- *ஹெல்தி,வெஜ், தாளக குழம்பு*(திருநெல்வேலி ஸ்பெஷல்)*(veg thalaga kulambu recipe in tamil)
- தலைப்பு : பச்சை பயறு உருண்டை(green gram balls recipe in tamil)
- முளைகட்டிய பச்சை பயிறு மற்றும் முழு கருப்பு உளுந்து(sprouted greengram and black dal in tamil)
- கருப்பட்டி தேங்காய்பால் கொழுக்கட்டை(coconutmilk kolukattai recipe in tamil)
- பச்சை பட்டாணி காலிஃப்ளவர் வறுவல்(peas cauliflower fry recipe in tamil)
- *ஹெல்தி,வெஜ், தாளக குழம்பு*(திருநெல்வேலி ஸ்பெஷல்)*(veg thalaga kulambu recipe in tamil)

கமெண்ட் (2)