கத்திரிக்காய் முருங்கைக்காய் பலா கொட்டை பொரியல் (Kathirikkaai palakottai poriyal recipe in tamil)

கத்திரிக்காய் முருங்கைக்காய் பலா கொட்டை பொரியல் (Kathirikkaai palakottai poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பலா கொட்டையை கழுவி குக்கரில் 3 விசில் விட்டு வேக விடவும். வெந்து ஆறியவுடன் அதன் தோலை நீக்கி விடவும்.சின்ன வெங்காயம் 6,பூண்டு 5 பல், தோல் நீக்கி கழுவி வைக்கவும். முருங்கைக்காய் 1 நறுக்கி கழுவி வைக்கவும்.மாங்காய் 4 துண்டு நறுக்கி வைக்கவும்.
- 2
கத்திரிக்காய் 5 கழுவி வைக்கவும்.கடாயில் 3 டீஸ்பூன் ஆயில் விட்டு கடுகு 1 டீஸ்பூன், உளுந்து பருப்பு 1 டீஸ்பூன் கடலை பருப்பு 1 டீஸ்பூன் வரமிளகாய் 1 கிள்ளியது கறிவேப்பிலை தாளித்து அதில் சின்ன வெங்காயம், பூண்டு நறுக்கிய முருங்கைக்காய் பலா கொட்டை,மாங்காய் சேர்த்து வதக்கவும். கத்திரிக்காயை கடைசியாக நறுக்கி சேர்க்கவும்.
- 3
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன், சாம்பார் மிளகாய் தூள் 1 டீஸ்பூன்,உப்பு சேர்த்து கத்திரிக்காயை நறுக்கி சேர்த்து வதக்கவும்.தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
- 4
வெந்தவுடன் கலக்கி விட்டு அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.சுவையான பொரியல் ரெடி.சூடான சாதத்திற்கு ஏற்றது.😋😋
Keywords
Similar Recipes
More Recipes















கமெண்ட் (4)