முந்திரி மட்டன் கிரேவி (Munthiri mutton gravy recipe in tamil)
Sumaiya Shafi @cook_19583866
முந்திரி மட்டன் கிரேவி (Munthiri mutton gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும்,பட்டை,ஏலக்காய், கருவேப்பிலை, லவங்கம்,பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்.
- 2
பின் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி,வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
மட்டனை கழுவி கொஞ்சம் மிளகாய் தூள்,தயிர்,வெங்காயம், கருவேப்பிலை மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறி வைத்து கொள்ளவும்.
- 4
வெங்காயம் வதங்கியதும் கிளறி வைத்த மட்டனை சேர்த்து,மல்லி தூள்,சீரக தூள்,சோம்பு தூள்,மஞ்சல் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கிளறி,தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் வேக விடவும்.
- 5
கடைசியில் முந்திரி மற்றும் கச கச பேஸ்ட் சேர்த்து 5 நிமிடம் கிளறி இறக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13770191












கமெண்ட் (2)