வடைகறி (Vadai curry recipe in tamil)

#ve சைவ கிரேவி பழங்கால முறையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது இட்லி தோசை சப்பாத்தி எல்லாவற்றுக்கும் சேர்த்து சாப்பிடலாம். இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
வடைகறி (Vadai curry recipe in tamil)
#ve சைவ கிரேவி பழங்கால முறையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது இட்லி தோசை சப்பாத்தி எல்லாவற்றுக்கும் சேர்த்து சாப்பிடலாம். இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
கடலைப்பருப்பை ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 2
மிக்ஸி ஜாரில் காய்ந்தமிளகாய் சோம்பு சீரகம் மிளகு மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்
- 3
சிறிது சிறிதாக கடலைப்பருப்பை சேர்த்து நன்றாக வழுவழுவென அறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 4
இட்லி பானையை எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்தவுடன் இட்லி தட்டில் நாம் அரைத்து வைத்துள்ள மாவை இட்லித் தட்டில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 5
இட்லி பானையை மூடி 5 முதல் 10 நிமிடத்தில் வெந்துவிடும்
- 6
ஒரு கரண்டியை வைத்து குத்தி பார்த்தால் அதில் மாவு வரக்கூடாது அதுதான் சரியான பதம்.
- 7
கடாயை காய வைத்து தேவையான அளவு எண்ணெய் சேர்த்து தாளிக்க பொருட்கள் அனைத்தும் சேர்த்து நன்றாக தாளிக்க வேண்டும்
- 8
தாளிக்கும் பொருட்கள் பொரிந்த பின்னர் வெங்காயம் தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதில் மிளகாய் தூள் மல்லி தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- 9
வதங்கிய பின்னர் நாம் வேக வைத்துள்ள வடையை அதில் தூள் தூளாக சேர்க்க வேண்டும்.
- 10
மிக்ஸி ஜாரில் தேங்காயை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 11
அரைத்து வைத்துள்ள தேங்காயை கடாயில் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
- 12
வடகறி கொதிக்கவைத்து இறக்க வேண்டும்
- 13
இப்போது நமது சூடான சுவையான வடைகறி ரெடி ஆகிவிட்டது.
Keywords
Similar Recipes
More Recipes
- சுரைக்காய்(bottle gourd) kuzhambu (Suraikkai kulambu recipe in tamil)
- வெண்டைக்காய் குழம்பு (Vendaikai kulambu recipe in tamil)
- காளான் கிரீமிகிரேவி (Mushroom creamy Gravy recipe in tamil)
- தட்டை பயறு மசாலா குழம்பு (Thattai payaru masala kulambu recipe in tamil)
- ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா (Vellai kuruma recipe in tamil)



































கமெண்ட்