வாழை இலை மீன் வறுவல்(valai ilai meen varuval recipe in tamil)

வாழை இலை மீன் வறுவல்(valai ilai meen varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்து, மீன் துண்டுகள் மீது தடவி 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். - 2
மீன் நன்கு மசாலாவுடன் ஊறியவுடன் தோசைகல்லில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்தது கடாயில் தேங்காய் எண்ணையை ஊற்றி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், புளி கரைசல், உப்பு மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும். வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். - 3
வாழையிலையில் வெங்காய கலவை வைத்து, அதன் மீது மீன் வைக்கவும். இதன் மேல் வெங்காய கலவையை வைக்கவும். வாழையிலையை நன்கு கட்டவும்.
- 4
தோசைகல்லில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, வாழையிலையை போட்டு 5 நிமிடம் வேகவைக்கவும். மறுபுறம் திருப்பி போட்டு மேலும் 5 நிமிடம் வேகவைக்கவும்.
- 5
சுவையான வாழை இலை மீன் வறுவல் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes














கமெண்ட் (2)