மண்பானை மீன் குழம்பு(fish curry recipe in tamil)

மீன் குழம்பு பாரம்பரிய முறைப்படி மண் பாத்திரத்தில் செய்தால் மிகவும் வித்தியாசமான அருமையான சுவையுடன் இருக்கும் மிகவும் அருமையான இந்த மீன் குழம்பு அடுத்த நாள் சாப்பிடுவதற்கும் மிகவும் டேஸ்டாக இருக்கும்

சமையல் குறிப்புகள்
- 1
மீன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்து தனியே வைக்கவும் புளியை ஊற வைக்கவும்
- 2
ஒரு மண் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடு ஏறியதும் எண்ணெய் ஊற்றவும் எண்ணெய் சூடானதும் கடுகு உளுந்து வெந்தயம் சேர்க்கவும்
- 3
கடுகு பொரீந்து வெந்தயம் சிவந்ததும் வெங்காயம் தக்காளி கருவேப்பிலை இவற்றை சேர்த்து நன்கு வதக்கவும் வதங்கியதும் கரைத்த புளியை அதில் சேர்த்து4ஸ்பூன் குழம்பு மசாலா பொடி சேர்க்கவும்
- 4
இந்த மசாலாக் கலவை ஆறு அல்லது ஏழு நிமிடங்கள் நன்கு கொதிக்க வேண்டும் தேங்காய் சீரகம் சேர்த்து அரைத்த தேங்காய் விழுது இந்தக் குழம்பில் சேர்க்கவும் 3 நிமிடம் கொதிக்க விடவும்
- 5
இப்பொழுது உப்பு சேர்த்து மீன் துண்டுகளையும் அதில் சேர்க்கலாம் அகலமான கரண்டியால் மெதுவாக கலந்து விடவும்
- 6
இப்பொழுது இந்த குழம்பை மூடி வைத்து 2 நிமிடங்கள் மிகவும் குறைந்த தீயில் வைத்திருக்கவும்
- 7
இப்பொழுது மீன் நன்கு வெந்திருக்கும் அடுப்பிலிருந்து இறக்கி விடலாம் மிக மிக அருமையான மண்பானை மீன் குழம்பு மிகுந்த சுவையுடன் தயார்
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்