பன்னீர் பால் கிரேவி (Paneer Paal Gravy Recipe in tamil)

Sowmya Sundar
Sowmya Sundar @cook_16047444
Chennai

#பன்னீர் /மஷ்ரூம் வகை உணவுகள்
பன்னீரை குங்குமபூ கலந்த பாலில் சேர்த்து செய்யும் சுவையான கிரேவி. காஷ்மீரில் பிரபலமான கிரேவியான சாமன் காலியாவில் சில மாற்றங்களுடன் நான் முயற்சித்துள்ளேன் .

பன்னீர் பால் கிரேவி (Paneer Paal Gravy Recipe in tamil)

#பன்னீர் /மஷ்ரூம் வகை உணவுகள்
பன்னீரை குங்குமபூ கலந்த பாலில் சேர்த்து செய்யும் சுவையான கிரேவி. காஷ்மீரில் பிரபலமான கிரேவியான சாமன் காலியாவில் சில மாற்றங்களுடன் நான் முயற்சித்துள்ளேன் .

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 200 கிராம் பன்னீர்
  2. 1 கப் பால்
  3. 3 டேபிள் ஸ்பூன் தயிர்
  4. 2 பெரிய வெங்காயம்
  5. 1 துண்டு இஞ்சி
  6. 6 பல் பூண்டு
  7. 10 முந்திரி பருப்பு
  8. 1/4டீஸ்பூன் குங்குமப்பூ
  9. 1டீஸ்பூன் சீரகம்
  10. 1டீஸ்பூன் கஸூரி மேத்தி
  11. 1/2டீஸ்பூன் மஞ்சள் பொடி
  12. தேவையானஅளவு உப்பு
  13. 1/4டீஸ்பூன் சர்க்கரை
  14. 1டீஸ்பூன் கரம் மசாலா
  15. 1டீஸ்பூன் மிளகாய் தூள்
  16. 1/2டீஸ்பூன் மல்லி பொடி
  17. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முந்திரி பருப்பை வெந்நீரில் பத்து நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளவும்

  2. 2

    கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.பின் அதனுடன் ஊற வைத்த முந்திரி பருப்பு மற்றும் தயிர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்

  3. 3

    கடாயில் மீதி எண்ணெய் சேர்த்து சீரகம், தாளித்து அதில் அரைத்த விழுதை சேர்த்து மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கவும்.

  4. 4

    அதனுடன் மிளகாய் தூள்,மல்லி பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

  5. 5

    பின்னர் இதில் குங்குமபூ,பனீர் மற்றும் பால் சேர்க்கவும்.அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.சர்க்கரை சேர்த்து கொள்ளவும்.

  6. 6

    பன்னீர் கிரேவி கெட்டியாக ஆனதும் கஸுரி மேத்தி சேர்த்து இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sowmya Sundar
Sowmya Sundar @cook_16047444
அன்று
Chennai
Iam passionate about cooking traditional and healthy receipes. I like to try innovative receipes.
மேலும் படிக்க

Similar Recipes