பாலக் பன்னீர் (Paalak paneer recipe in tamil)

Shalini Prabu
Shalini Prabu @cook_17346945

#GP4 #week6 பன்னீர் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பாலக்கீரை பன்னீர் தான்.சத்தான இந்த பாலக் பன்னீர் செய்யலாம் வாங்க!

பாலக் பன்னீர் (Paalak paneer recipe in tamil)

#GP4 #week6 பன்னீர் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பாலக்கீரை பன்னீர் தான்.சத்தான இந்த பாலக் பன்னீர் செய்யலாம் வாங்க!

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
2 நபர்
  1. 1 கட்டுபாலக்கீரை
  2. 100 கிராம்பன்னீர்
  3. இஞ்சி - 1 சிறிய துண்டு
  4. 1பச்சைமிளகாய்
  5. வெங்காயம்-1 நறுக்கியது
  6. தக்காளி - 1 சிறியது (தக்காளிக்கு பதிலாக 2 ட்ஸ்ப் தயிர் கூட சேர்க்கலாம்)
  7. பூண்டு - 3 பொடியாக நறுக்கியது
  8. 1/4 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  9. 1/2 டீஸ்பூன்மிளகாய் தூள்
  10. 1 டீஸ்பூன்மல்லி தூள்
  11. - 1/2 டீஸ்பூன்கரம் மசாலா
  12. 10முந்திரி
  13. தாளிக்க
  14. 2 டீஸ்பூன்வெண்ணெய்
  15. 1பிரிஞ்சி இலை
  16. 5லவங்கம்
  17. பட்டை - 2 துண்டு
  18. 1/2 டீஸ்பூன்சீரகம்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைக்கவும்.பாலக்கீரையை சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்.தண்ணீர் கொதித்தவுடன் கீரை சேர்த்து 2 நிமிடம் வைக்கவும்.

  2. 2

    2 நிமிடம் ஆனவுடன் கீரையை வடிகட்டி குளிர்ந்த நீரை அதன் மேல் ஊற்றவும்.சிறிது ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளவும்.

  3. 3

    இஞ்சி,பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும்.

  4. 4

    வாணலியில் வெண்ணெய் உருக்கி தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்க்கவும்.

  5. 5

    பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து வதக்கவும்.

  6. 6

    1 டீஸ்பூன் உப்பு சேர்த்து வதக்கவும்.பிறகு கொடுக்கப்பட்டுள்ள மசாலாக்களை சேர்க்கவும்.(மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லி தூள்,கரம் மசாலா)

  7. 7

    மசாலா அனைத்தையும் சேர்த்து தக்காளி மசிந்து வர வேண்டும்.

  8. 8

    தக்காளி மசிஞ்சவுடன் அரைத்து வைத்த பாலக்கீரையை சேர்க்கவும்.

  9. 9

    பத்து முந்திரியை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைத்து அரைத்த விழுதை சேர்க்கவும்.

  10. 10

    கீரையை வேக வைத்து அரைத்து சேர்த்துளோம்,அதனால் அதிக நேரம் கொதிக்க தேவை இல்லை,2 நிமிடம் கொதிக்க வைத்து இறுதியாக வெட்டி வைத்துள்ள பன்னீர் சேர்த்து 1 நிமிடம் வைத்து அடுப்பை அனைத்து பரிமாறவும்.

  11. 11

    சப்பாத்தியுடன் வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shalini Prabu
Shalini Prabu @cook_17346945
அன்று

Similar Recipes