குளு குளு நீர் மோர்/ஐஸ் மோர் #குளிர் உணவு

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

குளு குளு நீர் மோர்/ஐஸ் மோர் #குளிர் உணவு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 நபர்கள்
  1. கெட்டி தயிர் - 1/2 கப்
  2. ஐஸ் தண்ணீர் / பானை தண்ணீர் - 2 கப்
  3. இஞ்சி - சிறு துண்டு
  4. பச்சை மிளகாய் - 1
  5. பெருங்காயத்தூள் - 1/2 ஸ்பூன்
  6. கறிவேப்பிலை - 1 கொத்து
  7. கொத்தமல்லி தழை - சிறிது
  8. உப்பு - தேவையான அளவு
  9. எண்ணெய் - 1/4 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கெட்டி தயிரை ஒரு அகன்ற பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும். அதில் குளிர் நீரை ஊற்றவும்

  2. 2

    தயிர் கடையும் மத்து மூலம் நன்கு கடையவும். நுரை பொங்கும் வரை கடையவும்

  3. 3

    இப்போது மோர் நன்கு சீராக வந்திருக்கும். இஞ்சி தோல் சீவி துருவி, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை யை ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  4. 4

    ஒரு கடாயில் ‌‌‌‌‌‌எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் தாளிக்கவும்

  5. 5

    பிறகு அத்துடன் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கவும். சிறிது ஆற விடவும்.

  6. 6

    தாளிதத்தை கடைந்துள்ள மோரில் சீராக கலக்கவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து பருகவும்.

  7. 7

    குளு குளு நீர் மோர் ரெடி‌ வெயில் காலத்தில் நம்ம உடம்பில் நீர்ச்சத்து குறையும். அதற்கு இந்த நீர்மோர் மிகவும் நல்லது. சீரகம் செரிமானத்துக்கும், பெருங்காயத்தூள் வயிற்று உப்புசத்திற்கும் ஏற்றது‌. இஞ்சி சேர்த்ததுனால சளி தொந்தரவு இருக்காது. உடம்புக்கு மிகவும் நல்லது. வெயில் காலத்தில் தினமும் மதிய வேலைகளில் அருந்தலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes