பச்சைப்பயிறு போண்டா

Kalpana Sambath
Kalpana Sambath @cook_18679105

பச்சைப்பயிறு போண்டா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஊறவைத்த பச்சைப்பயறு ஒரு கப்
  2. நறுக்கிய வெங்காயம்-1
  3. பச்சை மிளகாய்-2
  4. காய்ந்த மிளகாய் இரண்டு
  5. இஞ்சி ஒரு துண்டு
  6. சீரகம் ஒரு ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. கறிவேப்பிலை சிறிதளவு
  9. கொத்தமல்லி சிறிதளவு
  10. கடலைமாவு 3 ஸ்பூன்
  11. எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பச்சை பயிறை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும் ஆறிலிருந்து எட்டு மணி நேரம் ஊற வேண்டும்

  2. 2

    பின்பு ஊறிய பச்சை பயறை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் எடுத்துவைத்த பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய் இஞ்சி கொத்தமல்லி சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும் தண்ணீர் சேர்க்க வேண்டாம்

  3. 3

    பின்பு அதை ஒரு பவுலுக்கு மாற்றி அதனுடன் நறுக்கிய வெங்காயம் சிறிதளவு கருவேப்பிலை கொத்தமல்லி சீரகம் கடலை மாவு சேர்த்து நன்கு பிசையவும்

  4. 4

    பின்னர் ஒரு வாணலியில் எண்ணெயை காய வைத்து கலந்து வைத்த கலவையை உருண்டை உருண்டையாக போட்டு எடுக்கவும்

  5. 5

    மிதமான தீயில் வைத்து செய்தால்தான் உள்ளேயும் போண்டா வேகும் வெளியேயும் போண்டா வேகும் சுவையான பச்சைப்பயறு போண்டா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kalpana Sambath
Kalpana Sambath @cook_18679105
அன்று

Similar Recipes