முருங்கைக்காய் மசாலா

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari

முருங்கைக்காய் மசாலா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. முருங்கக்காய் 5
  2. வெங்காயம் நறுக்கியது ஒரு கப்
  3. தக்காளி பொடியாக நறுக்கியது இரண்டு
  4. தேங்காய் ஒரு கப் துருவியது
  5. தனியாத்தூள் 3 ஸ்பூன்
  6. பூண்டு ஆறு பல்
  7. சின்ன வெங்காயம் உரித்தது 10
  8. தாளிப்பதற்கு ஆயில் நான்கு டீஸ்பூன்
  9. வரமிளகாய் 6
  10. கடுகு உளுந்து கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    முருங்கைக்காயை 3 இன்ச் அளவில் நறுக்கவும் வெங்காயம் தக்காளி நறுக்கி ரெடி பண்ணவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து தாளித்து வெங்காயம் தக்காளி வதக்கவும். தக்காளி சுருள வதங்கியதும் முருங்கைக்காயை போட்டு வதக்கி தேவையான நீர் ஊற்றி உப்பு மஞ்சள்தூள் போடவும்.

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம் உரித்தது 10 பூண்டு ஆறு பல் வரமிளகாய் ஆறு துருவிய தேங்காய் ஒரு கப் தனியா தூள் 3 டீஸ்பூன் நீர் ஊற்றி மைய அரைக்கவும்.

  3. 3

    அரைத்த விழுதை முருங்கைக்காய் முக்கால் பதம் வெந்ததும் அதில் சேர்க்கவும் அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஊற்றவும் முருங்கக்காய் முழுவதும் வேகும் அளவிற்கு சுருள வதக்கவும். சுவையான முருங்கைக்காய் மசாலா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Soundari Rathinavel
அன்று

Similar Recipes