கில்லு பத்திரம் (Killu paththuram Recipe in Tamil)

Sahana D
Sahana D @cook_20361448

#nutrient2
#book
பூண்டு பிடிப்பவர்களுக்கு கில்லு பத்திரம் பிடிக்கும். சுவையாக இருக்கும். முதல் ஆளாக சமைத்து பாருங்கள்.(கடலை எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள்.அது தான் சுவையாக இருக்கும்) செஞ்சு உடனே சாப்பிடுவதை விட பழையது ஆன பிறகு கடலை எண்ணெய் சேர்த்து சூடு பண்ணி சாப்பிடுவது தான் சூப்பராக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2டம்ளர் இட்லி அரிசி
  2. 8வர மிளகாய்
  3. 1/2கட்டி பூண்டு
  4. 150கிராம் துவரம் பருப்பு
  5. 1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
  6. கடுகு
  7. கடலை பருப்பு
  8. கறிவேப்பிலை
  9. தேவையான அளவு கடலை எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    இட்லி அரிசி 6 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். வர மிளகாய் ஊற வைத்து கொள்ளவும். பிறகு மிக்ஸியில் பூண்டு வர மிளகாய் இட்லி அரிசி சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

  2. 2

    தண்ணியாக கரைத்து மொறு மொறு இல்லாமல் ஊற்றி எடுக்கவும். எடுத்து சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணவும்.

  3. 3

    துவரம் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

  4. 4

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு கடலை பருப்பு கறிவேப்பிலை வேக வைத்த துவரம் பருப்பு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். 2 கொதி வந்ததும் கட் பண்ணி வைத்த தோசை சேர்த்து வதக்கவும். சூடு ஆனதும் இறக்கவும். சூடான பூண்டு வாசத்துடன் கில்லு பத்திரம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sahana D
Sahana D @cook_20361448
அன்று

Similar Recipes