சுரைக்காய் வேர்க்கடலை கறி (Suraikkaai verkadalai curry recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#arusuvai5 சுரைக்காய் உடல் சூட்டைத் தணித்து உடலுக்குக் குளிர்ச்சியையும், மினுமினுப்பையும் கொடுக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து உடலை வலுப்படுத்தும். இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும். குடல் புண்ணை ஆற்றும்

சுரைக்காய் வேர்க்கடலை கறி (Suraikkaai verkadalai curry recipe in tamil)

#arusuvai5 சுரைக்காய் உடல் சூட்டைத் தணித்து உடலுக்குக் குளிர்ச்சியையும், மினுமினுப்பையும் கொடுக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து உடலை வலுப்படுத்தும். இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும். குடல் புண்ணை ஆற்றும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2 கப் சுரைக்காய்
  2. 1 கப் வறுத்த வேர்க்கடலை
  3. 1 டேபிள்ஸ்பூன் கடலை எண்ணெய்
  4. 1/2 டீஸ்பூன் கடுகு
  5. 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  6. 1காய்ந்த மிளகாய்
  7. 1கொத்து கறிவேப்பிலை
  8. 4 பல் பூண்டு
  9. 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  10. 1 டீஸ்பூன் சாம்பார் பொடி
  11. தேவைக்கேற்ப உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    சுரைக்காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்

  2. 2

    கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் கடலை எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு,, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை தாளித்து, நசுக்கிய பூண்டு மற்றும் பொடியாக நறுக்கிய சுரைக்காய் சேர்த்து வதக்கவும். அதில் தேவைக்கேற்ப உப்பு மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக வைக்கவும்

  3. 3

    வேர்க்கடலையை நன்கு வறுத்து தோல் நீக்கி மிக்ஸியில் கொரகொரப்பாக பொடித்து வைக்கவும்.

  4. 4

    சுரைக்காயை வெந்தவுடன் பொடித்து வைத்திருக்கும் வேர்க்கடலையை சேர்த்து பிரட்டி விடவும். மிதமான தீயில் 2 நிமிடம் நன்கு பிரட்டி எடுத்தால் சுவையான சுரைக்காய் வேர்க் கடலை கறி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes