எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1hrs
2 பரிமாறுவது
  1. 2பெரிய வெங்காயம்
  2. 2தக்காளி
  3. 4பச்சை மிளகாய்
  4. சிறிதுகறிவேப்பிலை
  5. 1கை கொத்தமல்லிதழை
  6. 1கை புதினா
  7. 1டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  8. உப்பு
  9. 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  10. 1டீஸ்பூன் மிளகாய் தூள்
  11. 2டீஸ்பூன்தனியா தூள்
  12. 1டீஸ்பூன் கரம் மசாலாதூள்
  13. 1டேபிள்ஸ்பூன் கடலை மாவு
  14. அரைக்க
  15. 1/2மூடி தேங்காய் துருவல்
  16. 1கை முந்திரி பருப்பு
  17. 1டீஸ்பூன் கசகசா
  18. தாளிக்க
  19. 4டேபிள் ஸ்பூன் ஆயில்
  20. 2பட்டை
  21. 2கிராம்பு
  22. 1டீஸ்பூன் சோம்பு
  23. 2ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

1hrs
  1. 1

    4 பச்சை மிளகாய், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது 1 கைப்பிடி கொத்தமல்லி தழை, 1 கைப்பிடி புதினா தழை சிறிது கருவேப்பிலையை எடுத்து வைக்கவும். 2 பெரிய வெங்காயம் தோல் நீக்கி கழுவி நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். தக்காளி-2 கழுவி நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். 1 டீஸ்பூன் சோம்பு கிராம்பு 2, ஏலக்காய் 2,
    2 துண்டு பட்டை எடுத்து வைக்கவும்.

  2. 2

    மிக்ஸி ஜாரில் 1 மூடி துருவிய தேங்காய் 1 கைப்பிடி உடைத்த முந்திரி பருப்பு, 1 டீஸ்பூன் கசகசா சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும். கடாயில் 4 டேபிள்ஸ்பூன் ஆயில் விட்டு கிராம்பு-2,பட்டை 2 துண்டு, 1டீஸ்பூன் சோம்பு,2 ஏலக்காய் தாளிக்கவும்.

  3. 3

    அதில் நறுக்கி வைத்த 1 கைப்பிடி கொத்தமல்லித்தழை, 1 கைப்பிடி புதினா இலை, கறிவேப்பிலை சிறிது இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து பச்சை வாசனை நீங்க வதக்கவும். நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். நறுக்கிய தக்காளியை சேர்த்து உப்பு சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கவும்.

  4. 4

    சிறிது தண்ணீர் விட்டு 2 டீஸ்பூன் தனியாத்தூள்,1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன் கரம்மசாலா சேர்த்து வதக்கவும்.

  5. 5

    தண்ணீர் 1 கப் விட்டு நன்கு கொதிக்க விடவும்.மசாலா பச்சை வாசனை
    நீங்கியவுடன் 1 டேபிள் ஸ்பூன் அளவு கடலை மாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து சேர்த்து கொதிக்க விடவும்.

  6. 6

    நன்கு கலக்கிவிட்டு 2 நிமிடம் கொதிக்கவிட்டு கெட்டியானவுடன் மேலும் 1 கப் தண்ணீர் விட்டு 3 நிமிடம் கொதிக்க விடவும்.

  7. 7

    கொதித்து கெட்டியானவுடன் அதில் தேங்காய் முந்திரி கசகசா அரைத்த விழுதை சேர்த்து நன்கு கலக்கி விடவும்.

  8. 8

    தண்ணீர் 1 கப் விட்டு தேவை என்றால் உப்பு சேர்த்து தட்டு போட்டு மூடி கொதிக்க விடவும்.அடிக்கடி திறந்து கிளறிவிடவும்.

  9. 9

    அடுப்பை சிம்மில் வைத்து 20 முதல் 30 நிமிடங்கள் வரை இதை கொதிக்க விட்டு அடிக்கடி கிளறி,ஊற்றிய எண்ணெய் மேலே மிதக்கும் வரை கொதிக்க விடவும்.சுவையான சால்னா ரெடி😋😋

  10. 10

    சுட்டு வைத்த பரோட்டாவை பிச்சு போட்டு அதன் மேலே 4 கரண்டி சால்னாவை ஊற்றி ஊறவைத்து சாப்பிட்டால் அடடா சுவையோ சூப்பர்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes