காலிஃபிளவர் பொட்டேட்டோ பொரியல்(Cauliflower Potato  curry recipe in Tamil)

kavi murali
kavi murali @kavimurali_cook
Chennai

* காலிஃபிளவரில் அதிகப்படியான அளவில் வைட்டமின் பி உள்ளதால் மூளையை சிறப்பாக செயல்பட வைக்கிறது.

*உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் மற்றும் சிறிதளவு புரதமும் நிறைந்துள்ளது. ஆகவே ஒல்லியாக இருப்பவர்களின் எடையை அதிகரிப்பதற்கு, உருளைக்கிழங்கு உறுதுணையாக இருக்கும்.

#ilovecooking

காலிஃபிளவர் பொட்டேட்டோ பொரியல்(Cauliflower Potato  curry recipe in Tamil)

* காலிஃபிளவரில் அதிகப்படியான அளவில் வைட்டமின் பி உள்ளதால் மூளையை சிறப்பாக செயல்பட வைக்கிறது.

*உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் மற்றும் சிறிதளவு புரதமும் நிறைந்துள்ளது. ஆகவே ஒல்லியாக இருப்பவர்களின் எடையை அதிகரிப்பதற்கு, உருளைக்கிழங்கு உறுதுணையாக இருக்கும்.

#ilovecooking

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5-6 பரிமாறுவது
  1. 3பெரிய உருளைக்கிழங்கு
  2. ஒரு கப் காலிஃப்ளவர்
  3. 1 1/2 டீஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள்
  4. மஞ்சள் தூள் சிறிதளவு
  5. 1/2 பச்சை மிளகாய்
  6. இஞ்சி சிறிய துண்டு
  7. கொத்தமல்லி சிறிதளவு
  8. எண்ணெய் தேவையான அளவு
  9. ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  10. கறிவேப்பிலை சிறிதளவு
  11. 1பெரிய வெங்காயம் நீளமாக நறுக்கியது
  12. 1தக்காளி நறுக்கியது
  13. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு குக்கரில் உருளைக்கிழங்கை மூன்று விசில் விட்டு நன்கு வேகவைத்து தோலுரித்து நான்காக நறுக்கிக் கொள்ளவும். காலிஃபிளவரை கொதிக்கும் நீரில் சிறிதளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து 10 நிமிடங்கள் வேக வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இஞ்சி,பூண்டு, பச்சைமிளகாய், கொத்தமல்லி, ஒன்னும் பாதியுமாக தட்டி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கியப்பின் தட்டி வைத்துள்ள விழுதை போட்டு நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதனுடன் தக்காளி,மஞ்சள் தூள், மிளகாய் தூள்,தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி வேகவைத்து உருளைக்கிழங்கு காலிபிளவர் சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து 5 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

  3. 3

    5 நிமிடங்கள் கழித்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி கிளறி இறக்கினால் சுவையான கமகமக்கும் வாசனையுடன் காலிபிளவர் பொட்டேட்டோ பொரியல் தயார். இதனை அனைத்து வகையான சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
kavi murali
kavi murali @kavimurali_cook
அன்று
Chennai
வானவில்தோன்றும் போதுவானம் அழகாகிறதுநம்பிக்கைதோன்றும் போதுவாழ்க்கை அழகாகிறது...
மேலும் படிக்க

Similar Recipes