உளுந்தம் பருப்பு கஞ்சி(Uluntham paruppu kanjii) #mom

Nithya Ramesh
Nithya Ramesh @cook_24521047

1. உளுந்து இரும்புச்சத்து நிறைந்தது.
2. எலும்புகளை பலப்படுத்தும்.
3. இந்த கஞ்சியை கர்ப்பிணி பெண்கள் 7 மாதத்திற்கு பிறகு அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.
4. இதனால் இடுப்பு எலும்புகள் பலப்படும்.
5. இதை பிரசவத்திற்குப் பிறகும் சாப்பிட்டால் தாய்ப்பால் சுரக்கும்.

உளுந்தம் பருப்பு கஞ்சி(Uluntham paruppu kanjii) #mom

1. உளுந்து இரும்புச்சத்து நிறைந்தது.
2. எலும்புகளை பலப்படுத்தும்.
3. இந்த கஞ்சியை கர்ப்பிணி பெண்கள் 7 மாதத்திற்கு பிறகு அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.
4. இதனால் இடுப்பு எலும்புகள் பலப்படும்.
5. இதை பிரசவத்திற்குப் பிறகும் சாப்பிட்டால் தாய்ப்பால் சுரக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பேர்
  1. 1. வெள்ளை உளுந்து (1 கப்) - 50 கிராம்
  2. 2. வெள்ளை பூண்டு 100 கிராம்
  3. 3. பச்சரிசி 25கிராம்
  4. 4. பனைவெல்லம் தேவைக்கேற்ப
  5. 5. சிறிதளவு  தேங்காய் துருவல்
  6. 6. ஆரிய பால் 50 எம்எல்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    குக்கரில் உளுந்தை போட்டு இளம் வறுப்பாக வறுக்கவும். பச்சரிசி வெள்ளைப்பூண்டு அதனுடன் சேர்த்து இரு மடங்கு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வேக விடவும்.

  2. 2

    ஐந்து விசில் வந்த பிறகு குக்கரை இறக்கவும் குக்கரை திறந்து பருப்பை நன்றாக மசித்து தேவையான அளவு பனை வெல்லம் பாகு காய்ச்சி ஊற்றி கலக்கவேண்டும்.

  3. 3

    நன்றாக கலக்க வேண்டும் அதற்குப்பின் ஆற வைத்த 50 எம்எல் பாலை அதில் ஊற்ற வேண்டும்.

  4. 4

    சிறிதளவு தேங்காய் துருவல் சேர்த்து இறக்க வேண்டும். உளுந்தங் கஞ்சி தயார்.#mom

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nithya Ramesh
Nithya Ramesh @cook_24521047
அன்று

Similar Recipes