கம்பு தோசை (Pearl  millet dosai) (Kambu dosai recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

சுவையான கம்பு தோசை செய்வது மிகவும் சுலபம். இந்த சுவையான கம்பு தோசையை அனைவரும் முயற்சிக்கவும்.
#Millet

கம்பு தோசை (Pearl  millet dosai) (Kambu dosai recipe in tamil)

சுவையான கம்பு தோசை செய்வது மிகவும் சுலபம். இந்த சுவையான கம்பு தோசையை அனைவரும் முயற்சிக்கவும்.
#Millet

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
  1. 2 கப் கம்பு அரிசி
  2. 1/4 கப் முழு வெள்ளை உளுந்து
  3. உப்பு தேவையான அளவு
  4. தண்ணீர் அரைப்பதற்கு

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    கம்பு அரிசியை நன்கு கழுவி தண்ணீர் சேர்த்து குறைந்தது ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும். அரைப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு உளுந்தை சேர்த்து ஊறவிடவும்.

  2. 2

    பின்னர் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும். அளவான தண்ணீர் சேர்க்கவும்.

  3. 3

    அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து உப்பு கலந்து இரவு முழுதும் வைத்தால் நன்கு மாவு புளித்து விடும்.

  4. 4

    காலையில் எடுத்து மாவை கரண்டியால் நன்கு கலந்து, தோசை தவாவை சூடு செய்து தோசை வார்க்கவும்.

  5. 5

    தோசை ஒரு பக்கம் வெந்தவுடன் திருப்பிப்போட்டு ஒரு நிமிடம் விட்டு எடுத்தால் கம்பு தோசை தயார்.

  6. 6

    இப்போது சத்தான, சுவையான கம்பு தோசையை உங்கள் விருப்படி சட்னி வைத்து சுவைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes