டோமினோஸ் ஸ்டைல் கோதுமை மாவு டேகோஸ் (Kothumai maavu tacos recipe in tamil)

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
Vellore, Tamil Nadu

#flour1
கோதுமை மாவு சேர்த்து செய்யும் ஸ்நாக்ஸ்

டோமினோஸ் ஸ்டைல் கோதுமை மாவு டேகோஸ் (Kothumai maavu tacos recipe in tamil)

#flour1
கோதுமை மாவு சேர்த்து செய்யும் ஸ்நாக்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 300 கிராம் கோதுமை மாவு
  2. 3 சிட்டிகை பேக்கிங் பவுடர்
  3. 1 டீஸ்பூன் உப்பு தூள்
  4. 1/2பிடி கொத்தமல்லி தழை
  5. 7 டீஸ்பூன் எண்ணெய்
  6. 100 மிலி தண்ணீர்
  7. 1வெங்காயம்
  8. 3உருளைக்கிழங்கு
  9. 1 ஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ்
  10. 1/2 கப் தக்காளி சாஸ்
  11. 150 கிராம் mozeralla சீஸ்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    மாவுடன் பேக்கிங் பவுடர், உப்பு தூள், 2 tbsp எண்ணெய் சேர்த்து மிருதுவாக பிசைந்து மூடி வைக்கவும்

  2. 2

    வாணலியில் 2 tbsp எண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய வெங்காயம், வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, சில்லி ஃப்ளேக்ஸ், 1/2 டீஸ்பூன் உப்பு தூள் சேர்த்து நன்றாக வதக்கி கலந்து எடுத்து வைக்கவும். இப்போது ஸ்டஃப்பிங் ரெடி.

  3. 3

    மாவை நன்றாக மீண்டும் பிசைந்து சம பாகங்களாக, உருண்டைகளாக பிரித்துக் கொள்ளவும்

  4. 4

    உருண்டைகளை சப்பாத்தி போல் திரட்டிக் கொள்ளவும்.

  5. 5

    சப்பாத்திகளை எண்ணெய் சேர்க்காமல் தோசை கல்லில் இரண்டு பக்கமும் 1 நிமிடம் மட்டும் சுட்டு எடுக்கவும்.

  6. 6

    சுட்டெடுத்த சப்பாத்தி யின் மேல் 1/2 டீஸ்பூன் தக்காளி சாஸ் தடவி அதன் மேல் துருவிய சீஸ் பரப்பவும்

  7. 7

    ஒரு பக்கம் மட்டும் ஸ்டஃப்பிங் வைத்து முடிக்கவும்.

  8. 8

    இதே போல் எல்லா சப்பாத்திகளையும் செய்து வைக்கவும்.

  9. 9

    வாணலியில் 3 tbsp எண்ணெய் சேர்த்து இரு பக்கமும் பொன்னிற மாக் பொரித்து எடுக்கவும்.

  10. 10

    சத்தான, சுவையான உருளைக்கிழங்கு டேக்கோஸ் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
அன்று
Vellore, Tamil Nadu
B.Sc, Chemistry Graduate. Homemaker and mother of 2 grown up Children
மேலும் படிக்க

Similar Recipes