வாழைத்தண்டு சூப் (Vaazhaithandu soup recipe in tamil)

Shalini Prabu
Shalini Prabu @cook_17346945

#GA4 #week10 மிகவும் சத்தான வாழைத்தண்டு சூப் செய்யலாம் வாங்க

வாழைத்தண்டு சூப் (Vaazhaithandu soup recipe in tamil)

#GA4 #week10 மிகவும் சத்தான வாழைத்தண்டு சூப் செய்யலாம் வாங்க

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
2 நபர்
  1. 1/2 கப் வாழைத்தண்டு
  2. 1பெரிய ஸ்பூன் துவரம்பருப்பு
  3. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  4. உப்பு தேவையான அளவு
  5. 1/2 ஸ்பூன் மிளகு தூள்
  6. 1/2 ஸ்பூன் சோளமாவு
  7. 1 ஸ்பூன் நறுக்கிய இஞ்சி
  8. 1 ஸ்பூன் நறுக்கிய பூண்டு
  9. 3 சின்ன வெங்காயம்
  10. 1/2 ஸ்பூன் சீரகம்
  11. சிறிதளவுநறுக்கிய கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    தண்டு நறுக்கி மோர் தண்ணீரில் போட்டு வைத்து நார் எடுக்கவும்.பிறகு குக்கர் இல் 1 ஸ்பூன் துவரம்பருப்பு சேர்த்து கழுவி எடுத்த தண்டு சேர்க்கவும்.

  2. 2

    மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து 1 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு எடுத்து கொள்ளவும்.

  3. 3

    தண்டு வேக வைத்த தண்ணீரை வடிகட்டி மிக்ஸி ஜாரில் தண்டு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  4. 4

    அரைத்ததை வடிகட்டி சாறு எடுக்கவும்.பிறகு வாணலியில் 1 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நறுக்கிய பூண்டு,இஞ்சி,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  5. 5

    சிறிது சீரகம் சேர்த்து வதக்கி தண்டு தண்ணீரை சேர்க்கவும்.

  6. 6

    தேவையான அளவு உப்பு,மிளகு தூள் சேர்த்து 1/2 ஸ்பூன் சோளமாவு 2 ஸ்பூன் தண்ணீரில் கரைத்து சூப்பில் ஊற்றவும்.

  7. 7

    2 நிமிடம் கொதித்தவுடன் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

  8. 8

    சுவையான சத்தான தண்டு சூப் தயார்!!

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shalini Prabu
Shalini Prabu @cook_17346945
அன்று

கமெண்ட் (2)

Similar Recipes