வாழைத்தண்டு கோலா உருண்டை (Vaazhaithandu kola urundai recipe in tamil)

#deepfry
வாழைத்தண்டு அதிக நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் கொண்டது. வயிற்று புண்களை குணப்படுத்தும்.குழந்தைகளுக்கு வாழைத்தண்டை அவசியம் கொடுக்க வேண்டும்.வாழைத்தண்டை கோலா உருண்டைகளாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
வாழைத்தண்டு கோலா உருண்டை (Vaazhaithandu kola urundai recipe in tamil)
#deepfry
வாழைத்தண்டு அதிக நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் கொண்டது. வயிற்று புண்களை குணப்படுத்தும்.குழந்தைகளுக்கு வாழைத்தண்டை அவசியம் கொடுக்க வேண்டும்.வாழைத்தண்டை கோலா உருண்டைகளாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
வாழைத் தண்டை வட்டவட்டமாக நறுக்கி குக்கரில் போட்டு ஒரு விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடு ஏறியவுடன் இரண்டு ஸ்பூன் கடலை பருப்பை போட்டு வறுத்து ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பவுடராக அரைத்துக் கொள்ளவும்.
- 3
பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் சோம்பு, பட்டை, கசகசா போட்டு தாளிக்கவும். பிறகு வரமிளகாய், பச்சைமிளகாய் போட்டு தாளிக்கவும்.
- 4
பிறகு இரண்டு ஸ்பூன் பொட்டுக்கடலைபோட்டு தாளிக்கவும். பிறகு 5 பல் பூண்டு,10 சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் 3 ஸ்பூன் தேங்காய் துருவலைப் போட்டு நன்றாக வதக்கவும்.
- 5
எல்லாம் நன்றாக வதங்கியதும் அவற்றை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொர கொரப்பாக அரைக்கவும்.
- 6
பிறகு அதே மிக்ஸி ஜாரில் வேக வைத்த வாழைத்தண்டை தண்ணீர் பிழிந்துவிட்டு இரண்டையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.
- 7
பிறகு அந்த மாவில் அரை ஸ்பூன் உப்பு போட்டு பிசையவும். பிறகு வறுத்த கடலைப்பருப்பு பவுடரை அதில் போட்டு பிசையவும். பிறகு கொத்தமல்லி கறிவேப்பிலையை போட்டு நன்றாக பிசையவும்.
- 8
பிசைந்த மாவை உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும் பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கோலா உருண்டைகளை அதில் போட்டு வேகவிடவும்.ஒரு பக்கம் வெந்தவுடன் மறுபக்கம் திருப்பி போட்டு பொரித்தெடுக்கவும்..
- 9
சுவையான வாழைத்தண்டு கோலா உருண்டை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைத்தண்டு கோலா உருண்டை (Vaazhaithandu kola uurundai recipe in tamil)
#deepfry நான் வெஜ் கோலா உருண்டை சுவையில் வெஜிடேரியன் கோலா உருண்டை Prabha muthu -
-
-
-
-
முருங்கைக்கீரை கோலா (Murunkaikeerai kola urundai recipe in tamil)
#deepfry மிகவும் ருசியானதிரும்பத் திரும்ப செய்யத் தோணும் கோலா... குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்பர்.. Raji Alan -
-
-
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
#GA4#kids2சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் மட்டன் கோலா உருண்டை.பிரியாணி குழம்பு வகைகளுக்கு ஏற்ற சைடிஷ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
வாழைக்காய் கோலா உருண்டை (Vaazhaikaai kola urundai recipe in tamil)
#my1strecipe#Arusuvai3 Subhashree Ramkumar -
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
சுவையான மிருதுவான மட்டன் கோலா உருண்டை#goldenapron3#arusuvai2 Sharanya -
செட்டிநாடு வாழைப்பூ கோலா உருண்டை
#bananaவாழைப் பூவை வைத்து எளிதாக நாம் அசைவ கோலா உருண்டை போல் சைவத்தில் செய்து சாப்பிடலாம் Cookingf4 u subarna -
-
காளான் வடை
#maduraicookingismசில குழந்தைகள் காளான் சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு வித்தியாசமாக வடையாகத் தட்டி கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
வாழைப்பூ கோலா வடை(valaipoo kola urundai recipe in tamil)
வாழைப்பூ கோலா வடை இதுபோல் செய்து பாருங்கள். அதன் நரம்பை எடுத்து விட்டு செய்து பாருங்கள் இல்லை என்றால் வயிற்றுப் போக்கை உண்டாக்கும். மட்டுமின்றி கசப்பு தன்மை உருவாகும்.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மாலை நேரத்தில் டீயுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.❤️✨ RASHMA SALMAN -
-
செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி? (Mutton kola urundai recipe in tamil)
சுவையான செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி என்று பார்ப்போம். #the.Chennai.foodie #the.Chennai.foodie #thechennaifoodie Namaku soru than mukiyam -
-
-
பிலாமூசு(பலாக்காய்)கோலா உருண்டை
#everyday2மட்டன் கோலா உருண்டை போன்று பலாக்காயை கோலா உருண்டை செய்யலாம் அபாரமான ருசியுடன் இருக்கும் எல்லோருக்கும் பிடிக்கும் Vijayalakshmi Velayutham -
-
மீன் கோலா உருண்டை(fish kolla Urundai)
#hotelஉங்கள் சுவையை தூண்டும் மீன் கோலா உருண்டை சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான மீன் கோலா உருண்டை Saranya Vignesh -
-
மட்டன் கோலா உருண்டை(mutton kola urundai recipe in tamil)
#clubஇறுதி நாட்களில் இதை செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)
#CF2மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
More Recipes
- முட்டை போண்டா (Egg bonda) (Muttai bonda recipe in tamil)
- சிக்கன் 65 (Chicken 65 recipe in tamil)
- உருளைக்கிழங்கு பறவை கூடு கட்லெட் / potato bird nest cutlet (Urulaikilanku cutlet recipe in tamil)
- கோதுமை இடியாப்பம் (Kothumai idiappam recipe in tamil)
- க்ரிஸ்பி வெண்டைக்காய் ஃப்ரை (Crispy vendaikkaai fry recipe in tamil)
கமெண்ட்