சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மட்டனை தண்ணீர் சேர்த்து 25 கிராம் இஞ்சி 25 கிராம் பூண்டு உப்பு ஒரு பச்சை மிளகாய் ஒரு ஸ்பூன் மஞ்சள் ஒரு டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை மற்றும் முந்திரி பேஸ்ட் சேர்த்து 3 விசில் வரை குக்கரில் வேக வைத்து எடுக்க வேண்டும்.
- 2
பிரியாணி அரிசியை இரண்டு முறை நன்றாக கழுவி பின்னர் அதை குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- 3
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு அதில் பிரியாணி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும் பின்னர் அதில் நீளவாக்கில் வெட்டி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- 4
பின்னர் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கவும் அதனுடன் பச்சை மிளகாயையும் சேர்க்கவும் பிறகு தக்காளி சேர்த்து கூழ் ஆகும் வரை நன்றாக வதக்க வேண்டும். அதனுடன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
- 5
மசாலா நன்றாக தயாரானவுடன் அதில் தயிர் சேர்த்து வதக்கவும் பிறகு வேக வைத்த மட்டனை சேர்க்கவும். பிறகு தண்ணீரை நன்றாக அளந்து ஒன்றரை லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். நன்றாக கொதி வந்தவுடன் அதில் கொத்தமல்லி புதினா சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 6
பிறகு மிதமான தீயில் வைத்து அரிசியை சேர்க்கவும் அரிசியை சேர்த்தவுடன் நன்றாக கொதி வந்து சமநிலை தண்ணீர் மற்றும் அரிசி சமநிலை ஆகும் வரை காத்திருக்கும் பிறகு குறைந்த தீயில் வைத்து விடவும் குறைந்தது 18 லிருந்து 20 நிமிடம் வரை தம் வைக்கவும்
- 7
கடைசியாக எலுமிச்சை சாறு பிழிந்து சூடாக முட்டை மற்றும் சாஸ் உடன் பரிமாறவும் சுவையான பாய் வீட்டு கல்யாணம் மட்டன் பிரியாணி தயார்.
Similar Recipes
-
பாய் வீட்டு மட்டன் தம் பிரியாணி
#salnaபிரியாணி செய்யும் பொழுது அரிசியின் அளவுக்கு கூடுதலாக கறி சேர்த்து செய்தால் சுவை அட்டகாசமாக இருக்கும். சமைப்பவருக்கு பொறுமை மிகவும் அவசியம். Asma Parveen -
-
-
-
-
தேங்காய்பால் மட்டன் தம் பிரியாணி
#Npl ஜீரக சம்பா அரிசியில் செய்யப்படும் இந்த பிரியாணியை மிகவும் ருசியாக இருக்கும் Cookingf4 u subarna -
-
-
-
-
-
திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி
சீரகசம்பா அரிசியானது தமிழ்நாட்டில் மற்றும் ஸ்ரீலங்கா பகுதிகளில் அதிகமாக விளைநிலங்களில் பயிரிடப்படுகிறது. அதனால் சீரக சம்பா அரிசி தமிழகத்தில் பாஸ்மதி அரிசியை விட மிகவும் பிரசித்தி பெற்றது. பாரம்பரியமிக்க திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணியில் இந்த சீரக சம்பா அரிசியை கொண்டு தான் செய்வார்கள். பிரியாணியை பிரியாணி அண்டாவில் விறகு அடுப்பில் தம் போட்டு செய்வது தனி ருசிதான். #salna #biryani Sakarasaathamum_vadakarium -
மட்டன் கறி
மட்டன் ஐ நார்மலா வெங்காயம் தக்காளி தேங்காய் பால் எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் எலும்பு எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் ஆனா ரெஸ்டாரன்ட் போனா திக்கா கீரீமியா ஒரு கிரேவி தருவாங்க நான் ரொட்டி புல்கா கூட சாப்பிட அவ்வளவு டேஸ்ட் ஆ இருக்கும் இத எப்படி தான் செய்யறாங்க என்று தோன்றும் மிகவும் எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
மட்டன் பிரியாணி
#cookwithfriends #thulasi #ilovecooking மட்டன் பிரியாணி தயார் செய்ய இளம் ஆட்டுக் கறியைத் தேர்வு செய்யவும்veni sridhar
-
-
-
-
-
-
-
-
-
பிரியாணி
#magazine4இவ்வாறு பிரியாணி செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும் இது எங்களுடைய ஸ்பெஷல் தம் பிரியாணி Shabnam Sulthana -
-
-
More Recipes
கமெண்ட்