மல்லி இலை சாதம் (Malli ilai satham recipe in tamil)

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555

#ownrecipe

கொத்தமல்லி இலைகளுக்கு பூஞ்சைகளை நீக்கும் சக்தியும், நச்சுக்களை நீக்கும் ஆற்றலும், தொற்றுக்களை நீக்கும் ஆற்றலும் ஆன்டி-செப்டிக் தன்மையும் உண்டு.கொத்தமல்லியில் ஒலியிக் அமிலம் லினோலிக் அமிலம் சிட்ரிக் அமிலம் அஸ்கார்பிக் அமிலம் போன்றவை நிறைந்து காணப்படுவதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை பெருமளவு குறைக்க உதவுகிறது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. உதிரியாக வடித்துள்ள நாலு பேருக்கு போதுமான அளவு சாதம்
  2. ஒரு கட்டுகொத்தமல்லி இலை
  3. 2பச்சை மிளகாய்
  4. சிறிதளவுஇஞ்சி
  5. 6 பல் பூண்டு
  6. உப்பு தேவையான அளவு
  7. தாளிப்பதற்கு எண்ணெய்
  8. ஒரு ஸ்பூன் கடலை பருப்பு
  9. ரெண்டு ஸ்பூன் வேர்க்கடலை
  10. அரை எலுமிச்சைச் சாறு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்கள்

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்து வைத்துள்ள மல்லி இலை,பச்சை மிளகாய்,இஞ்சி,பூண்டு உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.

  3. 3

    ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு கறிவேப்பிலை தாளித்து ஒரு ஸ்பூன் கடலை பருப்பு, இரண்டு ஸ்பூன் வேர்க்கடலை பருப்பு, சேர்த்து நன்றாக வறுத்து,அரைத்து வைத்துள்ள விழுது எண்ணெய் தேவையான அளவு உப்பு போட்டு உள்ளே சேர்க்கவும்

  4. 4

    மல்லி இலை பச்சை வாசனை போனவுடன் இறக்கி விடவும். கலவை நன்றாக ஆறியவுடன் உதிரியாக வடித்து வைத்துள்ள சாதத்தை மல்லி இலை கலவையுடன் சேர்த்து நன்றாக கிளற வேண்டும் கடைசியாக சிறிதளவு லெமன் சாறு சேர்த்து கலக்க வேண்டும் இப்போது சுவையான மல்லி இலை சாதம் ரெடி

  5. 5

    குறிப்பு முந்திரிப்பருப்பு வைத்து அலங்கரிக்கலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555
அன்று

Similar Recipes