ஐந்து பருப்பு உருண்டை மோர்க்குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
ஐந்து வகையான பருப்பையும் மூன்று மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும் பருப்புடன் சேர்த்து இரண்டு வரமிளகாய் ஊறவைக்கவும் மூன்று மணி நேரம் ஊறிய பிறகு தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு அதனுடன் ஊற வைத்த வரமிளகாய் பூண்டு இஞ்சி கருவேப்பிலை சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
- 2
கரகரப்பாக அரைத்த விழுது எடுத்து உருண்டை பிடித்து இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும் மோர் குழம்பு க்கு தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 3
மிக்ஸி ஜாரில் வெங்காயம் இஞ்சி கடலைப்பருப்பு சீரகம் கருவேப்பிலை தேங்காய் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு பொரிந்தவுடன் கடலைப்பருப்பு சேர்க்கவும் அதன் பிறகு வெங்காயத்தை வதக்கவும் அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளியை அதனுடன் சேர்க்கவும்
- 4
தக்காளி வதங்கிய பின் அதில் மோரை சேர்க்கவும் மோரில் அரைத்து வைத்த விழுதை சேர்த்து நன்கு கலக்கி விட்டு உப்பு மஞ்சள்தூள் சேர்த்து கலக்கி விடவும் அதன் பிறகு வெந்த உருண்டைகளை அதனுடன் சேர்த்து லேசாக கலக்கி விடவும் மோர் குழம்பு நன்கு நுரை கட்டி மேலே வந்து கொதிக்கும் பொழுது அடுப்பை அணைக்கவும் இப்போது ஐந்து பருப்பு உருண்டை மோர் குழம்பு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
கோதுமை ரவை கிச்சடி🥕
#goldenapron3 #carrot#bookகோதுமை ரவை கிச்சடி. கோதுமை உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது மேலும் சர்க்கரை நோயாளிகள் உணவில் அரிசியை தவிர்க்க கோதுமையை எடுத்துக்கொண்டால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.மேலும் இதில் கேரட் பீன்ஸ், குடமிளகாய், பச்சைப் பட்டாணி, வெங்காயம், சேர்ப்பதால் மேலும் இது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.💪👍 Meena Ramesh -
கொள்ளு வித் வசம்பு சூப்
#cookwithfriends#indrapriyadharsiniகொள்ளு உடலை குறைப்பதற்கு மட்டுமில்லாமல் உடல் உபாதைகளையும் தீர்க்கும் அதுமட்டுமல்லாமல் சளித் தொந்தரவுகளுக்கு சிறந்த நிவாரணியாகும் வசம்பு குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் வயிற்றிலிருக்கும் விஷமுறிவு மற்றும் வயிறு சம்பந்தமான அனைத்து தொந்தரவுகளும் நீக்கும் அரிய மருந்தாகும் இவ்வாறு சூப் வைத்து குடிக்கும் பொழுது குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் வயிற்றிலிருக்கும் உபாதைகள் நீங்கும் Indra Priyadharshini -
-
-
-
பருப்பு உருண்டை மோர் குழம்பு/Butter milk gravy(Paruppu urundai morkulambu recipe in Tamil)
*நம் முன்னோர்கள் சமைப்பதில் மிகவும் திறமைசாலிகள்.*எப்போதும் வித்தியாசமான முறையில் செய்து சாப்பிடுவது அவர்கள் கைதேர்ந்தவர்கள்.* அப்படித்தான் இந்த பருப்பு உருண்டை மோர் குழம்பு உருவாகியது என்று நினைக்கிறேன்.*இதை எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.#india2020 kavi murali -
-
-
-
மசால் (பாஜி)
#book பூரி, சப்பாத்தி மற்றும் தோசைக்கு சரியான ஜோடி. புதிதாக சமயல் கற்று கொள்பவர்களுக்கும், பணி புரியும் இளைஞர்களுக்கும் இந்த ரெசிபியை தருகிறேன். Meena Ramesh -
-
உருண்டை மோர் குழம்பு
#goldenapron3 கடலை பருப்பு வேண்டாம் எனில் இதில் துவரம்பருப்பு சேர்த்து உருண்டை செய்யலாம். BhuviKannan @ BK Vlogs -
கேரட் முள்ளங்கி ஊறுகாய்🥕🥕
#கேரட்#bookஇந்த ஊறுகாய் செய்முறை மிகவும் எளிதானது. சுவையானதும் கூட. கேரட் மற்றும் முள்ளங்கி கொண்டு செய்த ஊறுகாய் ஆகும். சப்பாத்தி, தயிர் சாதம் போன்றவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். எப்போதும் போல் மாங்காய் எலுமிச்சங்காய் போன்றவற்றின் ஊறுகாய் செய்வதற்கு இது போன்ற காய்கறிகளிலும் ஊறுகாய் முயற்சி செய்து பார்க்கலாம்.😋🌶️🍛 Meena Ramesh -
கத்தரிக்காய் கூட்டு🍆🍆
#book கத்தரிக்காயில் செய்யப்படும் இந்த கூட்டு மிகவும் சுவையாக இருக்கும். என்னுடைய அம்மாவின் ஃபேவரிட் ரெசிபி இது. எனக்கு பிடிக்கும் என்பதால் அடிக்கடி இதை எனக்கு செய்து கொடுப்பார். உப்பு நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், ரசம் சாதம் மோர் சாதத்திற்கு தொட்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும். 😋😍 Meena Ramesh -
-
-
கார்லிக் மஸ்ரூம் ஃப்ரைடு ரைஸ் (garlic Mushroom Fried RIce Recipe in tamil)
#goldenapron3#book Indra Priyadharshini -
-
பாகற்காய் பொரியல்
#bookபாகற்காய் கசக்கும் என்றாலும், உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிக மிக நல்லது. வயிற்றில் பூச்சித் தொந்தரவு இருந்தாலும் பாகற்காயை சாப்பிட்டால் சரியாகிவிடும். Meena Ramesh -
-
தஹி பராத்தா (dahi paratha)/curd
#goldenapron3 #book #lockdown2மதிய உணவிற்கு சமைக்க காய் கறிகள் இல்லை. தீர்ந்து விட்டது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் நினைத்த நேரத்தில் வெளியே செல்ல முடியாது.அதனால் வீட்டில் இருந்த கோதுமை மாவை வைத்து ஒரு கப் தயிர் பயன்படுத்தி இந்த தயிர் பராத்தா செய்தேன். மிகவும் மிருதுவாக இருந்தது.கூட மசாலா பொருட்கள் சேர்த்து செய்தேன். மணமும் சுவையும் அருமையாக இருந்தது. Meena Ramesh -
-
-
-
பீட்ரூட் வடை😋
#immunity #book சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று பீட்ரூட். பீட்ரூட்டை எப்பொழுதும்போல் பொரியலாகச் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். நோய்த்தொற்று மிகுந்த இந்த காலகட்டத்தில் உடலுக்கு எதிர்ப்பு சக்தி திறன் அதிகம் தேவைப்படுகிறது. பீட்ரூட்டில் நோய் எதிர்ப்புத்திறன் அதிகம் உள்ளது .மேலும் இதில் சீரகம், இஞ்சி, வெங்காயம், புரத சத்து நிறைந்த பருப்பு வகைகள் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பீட்ரூட்டில் ஸ்நாக்ஸாக வடை செய்து கொடுத்தோம் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். Meena Ramesh -
பிலாமூசு(பலாக்காய்)கோலா உருண்டை
#everyday2மட்டன் கோலா உருண்டை போன்று பலாக்காயை கோலா உருண்டை செய்யலாம் அபாரமான ருசியுடன் இருக்கும் எல்லோருக்கும் பிடிக்கும் Vijayalakshmi Velayutham
More Recipes
கமெண்ட் (4)