கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

#jan1
கொள்ளு ஏராளமான சத்துக்கள் நிரம்பியுள்ளன சளி இருமல் , பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி போன்ற நேரங்களில் கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)

#jan1
கொள்ளு ஏராளமான சத்துக்கள் நிரம்பியுள்ளன சளி இருமல் , பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி போன்ற நேரங்களில் கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பேர்
  1. 50 கிராம் கொள்ளு
  2. சிறியஎலுமிச்சை அளவு புளி
  3. 2 தக்காளி
  4. 11/2 டீஸ்பூன் மிளகு
  5. 1 டீஸ்பூன் சீரகம்
  6. 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  7. சிறிதுபெருங்காயத் தூள்
  8. தேவையானகொத்தமல்லி தலை
  9. 2மிளகாய்
  10. 6 பல் பூண்டு
  11. ஒரு டீஸ்பூன் எண்ணெய்
  12. ஒரு டீஸ்பூன் கடுகு
  13. சிறிதுகருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    புளியை தண்ணீரில் ஊற வைக்கவும்

  2. 2

    கொள்ளை குக்கரில் சேர்த்து வேகவைத்து தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்.மிக்ஸியில் தக்காளி மிளகு சீரகம் மஞ்சள்தூள் பெருங்காயத்தூள் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். இப்போது புளித்தண்ணீர் அரைத்த விழுது கொள்ளு தண்ணீர் சேர்த்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு நசுக்கிய பூண்டு வரமிளகாய் கறிவேப்பிலை தாளிக்கவும். ரசத்தை சேர்த்து கொதிக்க விடவும்

  4. 4

    ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லித்தழை சேர்த்து பரிமாறும் பவுலில் மாற்றி கொள்ளவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes