வாழைத்தண்டு பிரைட் ரைஸ் (Vaazhaithandu fried rice recipe in tamil)

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

வாழைத்தண்டு பிரைட் ரைஸ் (Vaazhaithandu fried rice recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 2 கப் சாதம் (உதிரி உதிரியாக)
  2. ஒரு கப் வாழைத்தண்டு (பொடியாக நறுக்கியது)
  3. 1குடை மிளகாய்
  4. 1கேரட்
  5. ஒரு பெரிய வெங்காயம்
  6. 8 பல் பூண்டு
  7. ஒரு ஸ்பூன் சீரக தூள்
  8. ஒரு ஸ்பூன்மிளகு தூள்
  9. ரெண்டு ஸ்பூன் சமையல் எண்ணெய்
  10. தேவையானஉப்பு
  11. தேவையானஅளவு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும் வாழைத்தண்டு குடமிளகாய் கேரட் பூண்டு வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும்

  2. 2

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி வெங்காயத்தைப் போட்டு வதக்கவும் வெங்காயம் வதங்கியதும் கேரட் வாழைத்தண்டு பூண்டு சேர்த்து நன்கு வதக்கி ஐந்து நிமிடம் மூடி வைக்கவும் அடுப்பை சிம்மில் வைக்கவும்

  3. 3

    பிறகு குடமிளகாயை சேர்த்து மிளகுத்தூள் சீரகத்தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்

  4. 4

    பிறகு வடித்த சாதத்தை போட்டு எல்லா இடமும் கிளறிவிட்டு சாதமும் என்ற காய்கறிகளுடன் சேர்த்து கிளறவும் வாழைத்தண்டு பிரைட் ரைஸ் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes