சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,லவங்கம், பிரிஞ்சி இலை சேர்க்கவும்... பிறகு அரைத்து வைத்த வெங்காய கலவை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கவும் பிறகு கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் வதக்கவும்... பிரியாணி மசாலா, மிளகாய் தூள், கரம் மசாலா, தனியாத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போக மிதமான தீயில் வதக்கவும்
- 2
சிக்கனுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும் பிறகு தயிர் சேர்த்து நன்றாக கலந்து குறைந்த தீயில் 15 நிமிடம் வைக்கவும் சிக்கன் முக்கால் பதம் வெந்த பிறகு அடுப்பை அணைக்கவும்
- 3
மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் பச்சை மிளகாய்,பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம், அரிசிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும் தண்ணீர் கொதித்து வரும் பொழுது ஊற வைத்த அரிசியை சேர்த்து முக்கால் பதத்திற்கு வேக வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
- 4
பிரியாணி பாத்திரத்தில் முதல் அடுக்காக வேகவைத்த அரிசியை சிறிதளவு சேர்க்கவும் பிறகு வேக வைத்த சிக்கன் மசாலாவை சிறிதளவு இதனுடன் சேர்த்து அதன் மேல் பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி, பொரித்த வெங்காயம் சேர்க்கவும் பிறகு இதன் மேல் மீண்டும் வேக வைத்த அரிசியை சேர்க்கவும்
- 5
மீண்டும் சிக்கன் மசாலா பொரித்த வெங்காயம் புதினா கொத்தமல்லி இலை சேர்க்கவும் இறுதியாக அனைத்து அரிசியும் சேர்க்கவும் ஊற வைத்த குங்குமப்பூ பால் கலவையை இதன் மேல் எல்லா இடங்களிலும் பரவுமாறு முற்றவும்
- 6
இறுதியாக நெய் சேர்க்கவும் காற்று புகாதவாறு மூடியை துணியால் நன்றாக கட்டி இதனை மூடவும் இப்போது தோசை சட்டியை சூடு செய்து குறைந்த தீயில் வைக்கவும் பிறகு பிரியாணி சட்டியை இதன்மேல் வைத்து 30 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும்
- 7
30 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து 15 நிமிடம் கழித்து மெதுவாக திறந்து கிளறி பரிமாறவும்
- 8
சுவையாக அனைவரும் செய்யக்கூடிய பேச்சுலர் சிக்கன் பிரியாணி தயார்
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
திண்டுக்கல் சிக்கன் பிரியாணி (Dindukal chicken biryani recipe in tamil)
#homeவீட்டிலேயே மசாலா அரைத்து செய்த சுவையான பிரியாணி Sharanya -
-
-
-
-
ஹைதராபாத் சிக்கன் பிரியாணி (Hyderabad chicken biryani recipe in tamil)
#ap பிரியாணிக்கு ஒரு புதிய வரையறையையும் சுவையையும் கொடுத்த மாநிலம் ஆந்திர... மிகவும் சுவையான சில பிரியாணி மற்றும் புலாவ் ரெசிபிகளைப் பெற்றெடுப்பதில் பிரபலமானது. ஆந்திர சிக்கன் பிரியாணி மசாலாப் பொருட்களின் கலவையைப் பயன்படுத்தி நீண்ட மெல்லிய அரிசி தானியங்களை சிக்கனுடன் கலக்கப்படுகின்றன. உங்கள் மதிய உணவிற்கு ஹைதராபாத் சிக்கன் பிரியாணியை முயற்சிக்கவும். Viji Prem -
-
தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி (Thalappakatti chicken biryani Recipe in Tamil)
#nutrient1 #book.பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள்.சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். Dhanisha Uthayaraj -
-
More Recipes
கமெண்ட் (3)