தானிய பிரியாணி

Jayakumar
Jayakumar @Jcook_28137367

#Np1 இந்த பிரியாணி சைவம் அசைவம் கலந்தது இது சீரக சம்பா அரிசியில் செய்தால் மணமும் ருசியும் சுவையும் சத்தும் நிறைந்தது

தானிய பிரியாணி

#Np1 இந்த பிரியாணி சைவம் அசைவம் கலந்தது இது சீரக சம்பா அரிசியில் செய்தால் மணமும் ருசியும் சுவையும் சத்தும் நிறைந்தது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி
5 பரிமாறுவது
  1. சீரக சம்பா அரிசி 1/4கி
  2. சுண்டல் பாசிப்பயறு மொச்சை கலந்து ஒரு கப்
  3. கடலை எண்ணெய் 100ml
  4. மல்லி புதினா ஒரு கப்
  5. பட்டை ஏலக்காய் கிராம்பு பிரியாணி இலை சோம்பு ஜாசிரா அன்னாசி பூ ஜாதிப்பத்திரி கலந்து 20கிராம்
  6. மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன்
  7. கோழி அல்லது மட்டன் வேகவைத்த தண்ணீர் 2கப்
  8. உப்பு
  9. எலுமிச்சை 🍋 சாறு 1/2ஸ்பூன்
  10. வெங்காயம் 1
  11. தக்காளி 🍅 3
  12. பச்சை மிளகாய் 3
  13. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

1மணி
  1. 1

    சுண்டல் பாசிப்பயறு மொச்சை பயறு இரவே நன்கு கழுவிவிட்டு ஊறவைத்து
    விடவும் தக்காளி வெங்காயம் பச்சை மிளகாய் நீளவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளவும்

  2. 2

    அடுப்பில் குக்கரை வைத்து கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் மசாலா பொருட்களை முதலிலேயே வெறும் சட்டியில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும் அந்த பொடி எண்ணெயில் போட்டு பச்சை மிளகாய் வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

  3. 3

    நன்கு வதங்கியதும் அதில் ஊறவைத்த பயறு வகைகள் உப்பு மல்லி புதினா எலுமிச்சம் சாறு வேகவைத்த இறைச்சி தண்ணீர் போற்றி மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும்

  4. 4

    கொதிவந்ததும் அரிசியை நன்கு கழுவி வைத்திருந்து அதில் போட்டு மேலாக மல்லி புதினா தூவி குக்கரை மூடி வைக்கவும் விசில் போட கூடாது தோசைக்கல்லை இன்னொரு அடுப்பில் வைத்து சூடானதும் இந்த குக்கரை அதன் மேல் வைத்து விசில் போடும் இடத்தில் ஒரு டம்ளரை போட்டு மூடி வைத்து 10 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும்

  5. 5

    சூடான சுவையான பிரியாணி தயார் வேக வைத்த காய்கறி தண்ணீர்கூட சேர்க்கலாம் கறி தண்ணீருக்கு பதில்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jayakumar
Jayakumar @Jcook_28137367
அன்று

Similar Recipes