Aval puttu

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602

#vattaram week4 kanyakumari
மிகவும் எளிதாக செய்யக்கூடிய இனிப்பு அவல் புட்டு

Aval puttu

#vattaram week4 kanyakumari
மிகவும் எளிதாக செய்யக்கூடிய இனிப்பு அவல் புட்டு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
5 பேர்
  1. 2 கப்பு கெட்டி அவல்
  2. 1 1/2 கப்பு வெல்லம்
  3. 4ஏலக்காய்
  4. 11 கப்பு தேங்காய் பூ துருவல்
  5. 2 1/2 கப்பு தண்ணீர்
  6. 10முந்திரி
  7. 5 ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    அவலை வாணலியில் போட்டு சிறிய தியில் வைத்து வறுத்து எடுக்கவும்

  2. 2

    வறுத்த அவலை மிக்ஸியில் போட்டு ரவை போல் அரைத்து கொள்ளவும்

  3. 3

    சுடுதண்ணீர் வைத்து சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். 1/2 மணி நேரம் ஊற வைக்கவும் பின்னர் உதிரியாக உதிர்த்து விடவும்

  4. 4

    வாணலியில் வெல்லம் சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்து கொள்ளவும்

  5. 5

    வடிகட்டிய பிறகு வெல்லப்பாகு

  6. 6

    மறுபடியும் வெல்லப்பாகு நன்கு கொதிக்க விடவும்

  7. 7

    வெல்லப்பாகு தண்ணீரில் விட்டால் பிரிந்து போகாமல் கெட்டியாக உருண்டையாக மாறும் வரை கொதிக்க விடவும்

  8. 8

    ஏலக்காய் தட்டி வெல்லப்பாகில் சேர்த்து பின்னர் தேங்காய் பூ துருவல் சேர்த்து நன்கு கலந்து விடவும்

  9. 9

    உதிர்த்த அவலை சேர்த்து நன்கு கிளறி உதிர்ந்து வரும் வரை கிளறி இறக்கவும் முந்திரி சேர்த்து நன்கு கலந்து மூடி வைத்து விடவும் 1 மணி நேரம். பின்னர் அவல் உதிரி உதிரியாக வரும்

  10. 10

    சுவையான அவல் புட்டு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
அன்று

Similar Recipes