அவல் தேங்காய் பாயசம்(aval coconut payasam recipe in tamil)

Rithu Home
Rithu Home @rithuhomemohana

அவல் தேங்காய் பாயசம்(aval coconut payasam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
4நபர்கள்
  1. 100கிராம் அவல்
  2. 5டீஸ்பூன் தேங்காய் பூ
  3. 100கிராம் வெல்லம்
  4. 200மில்லி லிட்டர் பால்
  5. ஒரு டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  6. 10 முந்திரி
  7. 10 திராட்சை
  8. 2 டீஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    அவலை வாணலியில் போட்டு அரை டீஸ்பூன் நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.

  2. 2

    வருத்த அவல் உடன் தேங்காய்ப்பூ சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    வெல்லத்தை பொடி செய்து அரை டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.

  4. 4

    அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து 2 டீஸ்பூன் நெய் விடவும்.நெய் காய்ந்தவுடன் முந்திரி திராட்சையை போட்டு வறுக்கவும். இதனுடன் அரைத்து வைத்த வெல்லப்பாகை ஊற்றவும். காய்ச்சிய வெல்லத்துடன் அரைத்து வைத்த அவல் தேங்காய் கலவையை போட்டு கலக்கி விடவும்..

  5. 5

    ஏலக்காய் பொடியை போட்டு இரண்டு நிமிடங்கள் கொதி விடவும்..

  6. 6

    இப்பொழுது பாயசம் ரெடி இறக்கி வைத்து ஆறவிட்டு அதனுடன் 200 மில்லி லிட்டர் பால் கலந்து பரிமாறவும்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rithu Home
Rithu Home @rithuhomemohana
அன்று
என் பெயர் மோகனா ..எனக்கு சமையல் செய்வது பிடிக்கும் ..என் வீட்டில் நான் மட்டுமே சமைப்பேன் ..நான் கொங்கு நாட்டு சமையலை அதிகமாக விரும்பி சமைப்பேன் ..எனக்கு அதிக விருப்பம் சைவத்தில் தான்.. அசைவம் சாப்பிட விருப்பம் குறைவுதான்..அசைவ உணவுகளையும் நான் சமைப்பேன் ..என் சமையலை செய்து பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி வணக்கம் ..
மேலும் படிக்க

Similar Recipes