ரவா இட்லி பர்கர்

#cookwithsugu
இந்த லாக்டோன் இல் சுலபமாக காலையில் மீந்த இட்லி மற்றும் மதியம் மீந்த பொரியலை வைத்து ஒரு எளிமையான மற்றும் ருசியான ஈவினிங் ஸ்நாக்ஸ் டைம் பர்கர் எப்படி செய்வது என்று பகிர்ந்துள்ளேன்.
ரவா இட்லி பர்கர்
#cookwithsugu
இந்த லாக்டோன் இல் சுலபமாக காலையில் மீந்த இட்லி மற்றும் மதியம் மீந்த பொரியலை வைத்து ஒரு எளிமையான மற்றும் ருசியான ஈவினிங் ஸ்நாக்ஸ் டைம் பர்கர் எப்படி செய்வது என்று பகிர்ந்துள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ரவா இட்லி எப்படி செய்வது என்று பார்ப்போம். 1/2 கப் ரவை 1/4 கப் தயிர் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 2
1/4 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். கலந்த கலவையை 20 நிமிடம் அப்படியே வைத்து விடவும்.
- 3
20 நிமிடம் கழித்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து. கொள்ளவும்
- 4
இப்பொழுது அதை இட்லி தட்டில் ஊற்றி 15 நிமிடம் வேக வைத்து எடுத்தால் நம்முடைய ரவா இட்லி தயார். செய்து வைத்த இட்லியை இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- 5
வாணலியில் 1/2 டேபிள்ஸ்பூன் வெண்ணை சேர்த்து வெட்டி வைத்த இட்லியை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 6
உருளைக்கிழங்கு பட்டாணி பொரியல் ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்
- 7
அதே பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் பிரட் கிரம்ஸ் 1 டேபிள்ஸ்பூன் மைதா மாவு மற்றும் 1 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் சேர்த்துக் கொள்ளவும்
- 8
அடுத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் ரவை, 1/2 வெங்காயம் பொடியாக நறுக்கியது, 1/4 நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.
- 9
இப்பொழுது தேவைக்கேற்ப மிளகு தூள் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
- 10
பிசைந்த உருளைக்கிழங்கு பொரியலில் இருந்து சிறிதளவு எடுத்து கையில் தட்டி வடை போல் செய்து வைத்துக் கொள்ளவும். நம்முடைய பட்டீஸ் ரெடி
- 11
ஒரு வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து செய்து வைத்திருக்கும் பட்டீஸ் நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 12
பர்கரை அடுக்குவதற்கு முதலில் நம் இட்லி துண்டில் ஒரு பக்கம் மயோனைஸ் 1 டேபிள் ஸ்பூன் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் கெட்சப் சேர்த்து கொள்ளவும்.
- 13
இதன்மேல் லெட்டூஸ் மற்றும் நாம் செய்திருக்கும் உருளைக்கிழங்கு பட்டீஸ் வைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் மயோனைஸ் கொஞ்சம் மற்றும் கெட்சப் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்
- 14
இதன் மேல் ஒரு சீஸ் சீட் சேர்த்துக் கொள்ளவும். (சீ சீட் இல்லை என்றால் துருவிய சீஸ் கூட பயன்படுத்தலாம்). அதன் பின்னர் மற்றொரு இட்லியில் மயோனைஸ் மற்றும் கெட்சப் தடவி அதன் மேல் சேர்த்து வைக்கவும்.
- 15
மேலே சிறிது எள் சேர்த்துக் கொள்ளவும். நம்முடைய சுவையான இட்லி பர்கர் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இட்லி பர்கர்
#leftover மீதமான சாதம் இட்லியை கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த இட்லி பர்கர் செய்துள்ளேன் Viji Prem -
சிக்கன் பர்கர் (Chicken burger recipe in tamil)
#GA4 #flour1 பர்கர் பன் ரெசிப்பி ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்... அதை வைத்து இந்த சிக்கன் பர்கர் செய்துள்ளேன்.. Muniswari G -
-
ரவா உப்மா
#pms familyகாலை சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு ரவா உப்புமா எப்படி செய்வது என்று பார்ப்போம்.MuthulakshmiPrabu
-
ஹெல்தி பர்கர் இட்லி 🍔
#இட்லிகுழந்தைகளுக்கு இதுபோல் வித்தியாசமாக செய்து கொடுக்கும் பொழுது மிகவும் விரும்பி சாப்பிடுவர். இதில் கோதுமை ரவை மற்றும் காய்கறிகள் சேர்ந்துள்ளதால் மிகவும் ஆரோக்கியமான உணவு. BhuviKannan @ BK Vlogs -
இட்லி மசாலா(Idli masala recipe in tamil)
#npd2 காலையில் செய்த இட்லியை வைத்து சுவையான ஆரோக்கியமான மாலை சிற்றுண்டி இட்லி மசாலா.manu
-
மொறுமொறுப்பான மற்றும் சாஃப்டான முட்டை பால்ஸ் (Muttai balls recipe in tamil)
#worldeggchellange மிகவும் புதுமையானது மற்றும் மிகவும் சுலபமாக ஈவினிங் ஸ்நாக்ஸ் மற்றும் ஒரு ஸ்டார்டர் வகை சாப்பிடக்கூடிய இந்த முட்டை பால் எப்படி செயல் என்று பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
இட்லி ரவா இட்லி (Idli rava idli recipe in tamil)
#kids3இது இட்லி ரவா என்று மால்களில் கிடைக்கும் ரவை கொண்டு செய்த ரவா இட்லி ஆகும்.சாதாரண ரவை(சூஜி) அல்ல.ஆனால் ரவா இட்லி போலவே சுவையாக இருக்கும். Meena Ramesh -
ஒயிட் பானி பூரி (White paani poori recipe in tamil)
#made2 ஒயிட் பானிபூரி/ பங்காருபேட் பானிபூரி (பெங்களூர் ஸ்பெஷல் பானி பூரி) Azmathunnisa Y -
-
மீதமான சாதத்தில் செய்த ரவா இட்லி (Rava idli recipe in tamil)
#steam மதியம் செய்த சாதம் மீதமானால் இரவு அதை வைத்து அருமையான இட்லி செய்து சாப்பிடலாம்.. Muniswari G -
6இன் 1 மேகி ஸ்நாக்ஸ்
#MaggiMagicInMinutes #collab மேகியை வைத்து ஆறு விதமான ஸ்நாக்ஸ் செய்துள்ளேன்.. மிகவும் அருமையாக இருந்தது.. நீங்களும் முயற்சி செய்யுங்க.. Muniswari G -
ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் french fries recipe in tamil
#kilangu இது குழந்தைகளுக்கு பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் செய்வதும் சுலபம் Muniswari G -
-
ரவா இட்லி(rava idli recipe in tamil)
#ed2சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா இட்லி Lakshmi Sridharan Ph D -
சில்லி இட்லி வ்ரை (Chilli idli fry Recipe in tamil)
#magazine1விருந்துக்கு புது வித appetizer. மீந்த இட்லிகளை ருசியான சில்லி இட்லி வ்ரை ஆக மாற்றுங்கள். விருந்தினர் அனைவரும் இந்த ஸ்டார்டர் எப்படி செய்தீர்கள் என்று கேட்பார்கள் Lakshmi Sridharan Ph D -
ரவா மசாலா தோசை
ரவா மசாலா தோசை ஒரு தென்னிந்திய உணவு வகை.ரவையை பயன்படுத்தி செய்யப்படுகிறது.இந்த தோசை எளிதில் செய்யக்கூடியது,சுவையானது.இதற்கு சரியான காம்பினேசன் சாம்பார்,சட்னி.மற்ற தோசைகளை போல இந்த மாவினை புளிக்க வைக்க தேவையில்லை. Aswani Vishnuprasad -
சீஸ் வெஜ் பர்கர்
#nutrient1 #book. கால்சியம் சத்து எலும்புகளின் உறுதிக்கு முக்கியமானது. முதுகு வலி, மூட்டு வலி, எலும்பு அரிப்பு என பாதிக்கப்படுவதற்கு கால்சியம் சத்து குறைபாடே காரணம். பால் பொருட்களில் ஒன்றான சீஸ் மிகவும் சிறந்தது. ஏனெனில் சீஸிலும் கால்சியம் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. Dhanisha Uthayaraj -
ரவா இட்லி (rawa idly)
ரவா இட்லி செய்வது மிகவும் சுலபம். மிகக் குறைந்த நேரத்தில் செய்யும் இந்த இட்லி மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.#breakfast Renukabala -
ரவா உப்மா
வேகமான சிற்றுண்டி-ரவா உப்புமா எளிமையான சிற்ற்ண்டி.இது தென்னிந்தியாவில் பிரபலமானது.வறுத்த ரவையை கொண்டு செய்யப்படுகிறது.பல பெயர்கள் உண்டு உப்புமாவு,உப்மா,உப்பிந்தி,உப்பீட் Aswani Vishnuprasad -
ரவா தோசை
#lockdownஇந்த வைரஸ் பாதிப்பினால் நாங்க சிங்கப்பூர்ல அடிக்கடி ஷாப்பிங் போறது இல்லை. உளுத்தம் பருப்பு முடிந்துவிட்டதால் இட்லிக்கு மாவு அரைக்க முடியவில்லை .அதனால் ரவா தோசை ஊற்றி சாப்பிட்டோம்.இப்படி செய்து பாருங்க, ஹோட்டல் ஸ்டைலில் சும்மா மொரு மொரு தோசை சூப்பரா வரும். BhuviKannan @ BK Vlogs -
ரவா இட்லி
#இட்லி #book ரவையில் செய்யப்படும் இட்லி. என் கணவருக்கு பிடித்தமான இட்லி. மிகவும் ஈஸியாக செய்யலாம். தயார் செய்யும் நேரம் சிறிது சேர்த்து ஆகும். Meena Ramesh -
மத்தூர் வடை கர்நாடகா சமையல்
மத்தூர் வடை கர்நாடகா மைசூர் அருகில் உள்ள ஒரு ரயில்வே நிலையம் கொண்ட ஊர் இங்கு பல ரயில்கள் நின்று செல்வதால் அங்கு அந்த காலகட்டத்தில் உடனடியாக தயாரித்துக் கொடுத்த வடை கர்நாடகாவில் அக்கி ரொட்டி ஃபேமஸ் அதுபோல் நீர் தோசை ரவா இட்லி ரவா தோசை கோலாப்பூர் சிக்கன் மங்களூர் மீன் கறி எல்லாம் பேமஸ் ஆனது நான் இந்த மத்தூர் வடை விரும்பி செய்வேன் அதனால் அதை செய்கின்றேன் #goldanapron2 Chitra Kumar -
சீஸ் இல்லாமல் வெஜிடபிள் பிஸ்சா
#hotelஇன்றைக்கு நாம் எந்த லாக்டவுன் நேரத்தில் வீட்டிலேயே சுலபமாக வெஜிடபிள் பிஸ்சா ஹோட்டல் சுவையில் எப்படி செய்வது என்று பாப்போம். Aparna Raja -
கேழ்வரகு வால்நட் ரவா இட்லி
#cookerylifestyleசத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி Lakshmi Sridharan Ph D -
இட்லி மாவில் காரக் குழிப்பணியாரம்
#leftover இட்லி மாவு மீதமுள்ளதா அப்போ இந்த சுவையான கார குழிப்பணியாரம் செய்யலாம். Thulasi -
-
-
-
ரவா பணியாரம்(Rava paniyaram recipe in tamil)
#made2 week 2ஈஸியான மற்றும் சுவையான ரவா பணியாரம் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் Jassi Aarif
More Recipes
கமெண்ட்