கத்தரிக்காய் பாசிப்பயிறு குழம்பு / Kathirikai pachippayaru curry Recipe in tamil

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#magazine2
இது பழைய காலத்தில் இருந்து செய்து வரும் உணவு.சாப்பாட்டில் பிசைந்து சாப்பிடவும்,சப்பாத்திக்கு side dish ஆகவும் சாப்பிட சுவையாக இருக்கும்.ஆரோக்கியம் நிறைந்த உணவு.எளிதில் செய்யலாம். புளியோதரை சாதத்திற்கு தொட்டுக்கொண்டு சாப்பிட இது சுவையாக இருக்கும். எங்கள் வீட்டில் புளியோதரை தயார் செய்தால் இதை கட்டாயமாக சைடு டிஷ் ஆக செய்வோம்.

கத்தரிக்காய் பாசிப்பயிறு குழம்பு / Kathirikai pachippayaru curry Recipe in tamil

#magazine2
இது பழைய காலத்தில் இருந்து செய்து வரும் உணவு.சாப்பாட்டில் பிசைந்து சாப்பிடவும்,சப்பாத்திக்கு side dish ஆகவும் சாப்பிட சுவையாக இருக்கும்.ஆரோக்கியம் நிறைந்த உணவு.எளிதில் செய்யலாம். புளியோதரை சாதத்திற்கு தொட்டுக்கொண்டு சாப்பிட இது சுவையாக இருக்கும். எங்கள் வீட்டில் புளியோதரை தயார் செய்தால் இதை கட்டாயமாக சைடு டிஷ் ஆக செய்வோம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பேர்
  1. 1 கப் பாசி பயறு
  2. 6 to 8 கத்தரிக்காய்
  3. 10-12 சிறிய வெங்காயம்
  4. 1தக்காளி பொடியாக நறுக்கியது
  5. தாளிக்க
  6. 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  7. 1 ஸ்பூன் கடுகு
  8. 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  9. 4 வர மிளகாய்
  10. கருவேபபிலை கொஞ்சம்
  11. 1/2 ஸ்பூன் பெருங்காய தூள்
  12. தேவையான அளவுஉப்பு
  13. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  14. 1ஸ்பூன் சாம்பார் தூள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மேல் கூறிய தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும். பாசிப்பயறை கழுவி குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொஞ்சமாக சிறிது உப்பு சேர்த்து இரண்டு அல்லது மூன்று சவுண்டு விட்டு வேக வைத்துக் கொள்ளவும். கத்திரிக்காயை அரிசி கழுவிய தண்ணீரில் அரிந்து போட்டு வைத்துக் கொள்ளவும் சிறிய வெங்காயத்தை உரித்து வைத்துக் கொள்ளவும்.கடுகு உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு வரமிளகாய் கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் அதில் கடுகு சேர்த்து பொரிய விட்டு பிறகு உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு வரமிளகாய் கறிவேப்பிலை பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்கவும் அதன் பிறகு சிறிய வெங்காயத்தை சேர்த்து லேசாக வதக்கவும்

  3. 3

    பின்பு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும். நீளவாக்கில் அரிந்த கத்தரிக்காயை இப்போது சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் சாம்பார் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.(ஏற்கனவே பாசி பருப்பில் சிறிது உப்பு சேர்த்து உள்ளோம். எனவே பார்த்து உப்பு சேர்த்துக் கொள்ளவும்) இதற்கு தண்ணீருக்கு பதிலாக அரிசி கழுவிய தண்ணீரை சிறிது எடுத்து வைத்து வேக வைக்க அந்த தண்ணீரை பயன்படுத்தவும் மிகவும் சுவையாக இருக்கும்

  4. 4

    இப்போது காயை மூடிவைத்து பாதி வேக்காடு வேக வைக்கவும் பிறகு வேக வைத்த பாசி ப்பயரை சேர்த்து மூடிவைத்து சிறிது நேரம் வேக விடவும்

  5. 5

    கத்திரிக்காயும் பாசிப்பயறும் நன்கு கலந்து வெந்தவுடன் சிறிது கூட்டு பக்குவத்தில் வரும்பொழுது அடுப்பை நிறுத்தி விடவும். இந்தக் குழம்பை தண்ணீராக வைக்க வேண்டாம். (தண்ணீராகும் வைத்துக்கொள்ளலாம் ஆனால் எங்களுக்கு சிறிது கெட்டியாக பிடிக்கும் அதனால் நாங்கள் இப்படி செய்வோம்.)

  6. 6

    இப்போது பாசிப்பயிறு கத்திரிக்காய் குழம்பு தயார். இதை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம் சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள சுவையாக. மேலும் ரசம் சாதம் மோர் சாதம் போன்றவற்றிற்கு தொட்டுக் கொள்ளலாம்.நாங்கள் புளியோதரை செய்தால் அந்த சாதத்திற்கு தொட்டுக்கொள்ள இதை எப்போதும் செய்வோம் மிகவும் சுவையாக இருக்கும். புளியோதரை சாப்பாட்டிற்கு. நீங்களும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.தங்களுக்கு விருப்பம் என்றால் கடைசியாக ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கொள்ளலாம். அது கூட்டு போல் ஆகிவிடும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

கமெண்ட் (9)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
But your all recipies are in hindi..can't do anything.very sorry language problem.

Similar Recipes