திணை குளாப் ஜாமுன்

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl

திணை குளாப் ஜாமுன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
8 பேர்
  1. 1 கப்திணை ரவை
  2. ¾ கப்ரவை
  3. 2 கப் + 2 மேஜைக்கரண்டிசர்க்கரை
  4. 2 கப்தண்ணீர்
  5. 2 மேஜைக்கரண்டிபால் பவ்டர்
  6. 3 கப்பால்
  7. 1 மேஜைக்கரண்டி மைதா மாவு
  8. சிறிதளவுகுங்கும பூ + ஏலப்பொடி
  9. 1 தேக்கரண்டியளவுநெய்
  10. எண்ணெய் பொரிப்பதற் கு

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் திணை ரவையை வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதே பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் (தலா 2 கப்) சம அளவு எடுத்து அத்துடன் ஏலப்பொடி மற்றும் குங்கும பூ சேர்த்து காய்ச்சி வைத்துக்கொள்ள வேண்டும்.சர்க்கரை பாகு தயார்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் மேலே குறிப்பிட்ட அளவு நெய்,பால், பால் மாவு மற்றும் 2 மேஜைக்கரண்டி சர்க்கரை சேர்த்து காய்ச்சி அத்துடன் திணை ரவை மற்றும் ரவையை சேர்த்து நன்றாக கிளறவும். கெட்டியான பருவம் வந்ததும் அத்துடன் 1 மேஜைக்கரண்டி மைதா மாவை சேர்த்து நன்றாக கிளறவும்.கலவை கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும். இந்த கலவை சிறிது ஆரும் வரை காத்திருக்கவும்

  3. 3

    இந்த கலவையில் இருந்து சிறிதளவு எடுத்து உருண்டைகளாக பிடித்து வைத்து கொள்ள வேண்டும்.

  4. 4

    மற்றொரு பாத்திரத்தில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், இந்த உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.பொரித்த உருண்டைகளை உடனுக்குடன் சர்க்கரை பாகில் போட்டு விட வேண்டும்.திணை குலாப் ஜாமுன் தயார்.

  5. 5

    பரிமாறும் போது திணை குளாப் ஜாமுன் மேல் நறுக்கிய முந்திரி பருப்பு துண்டுகளை தூவி பரிமாறவும், பார்க்க அழகாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ருசியாகவும் இருக்கும்.

  6. 6

    டிப்ஸ் : 1.ரவை சேர்ப்பதன் மூலம் திணை ரவையினால் ஏற்படும் சிறிதளவு கசப்பு தன்மை நீங்கி விடும்.

    2.மைதா மாவு கெட்டி தன்மையை அதிகரிக்கும் இதனால் உருண்டை பிடிக்க வசதியாக இருக்கும்.

    3. நெய்,பால் மற்றும் பால் மாவு திணை குளாப் ஜாமுனுக்கு கூடுதல் ருஸி கொடுக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl
அன்று

Similar Recipes