புஸ் புஸ் பூரி

Sowmya
Sowmya @vishalakshi

#vattaram
Week 10

புஸ் புஸ் பூரி

#vattaram
Week 10

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 250 கிராம் கோதுமை மாவு
  2. 2 டேபிள்ஸ்பூன் ரவை
  3. 1 டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  4. தேவையான அளவு உப்பு
  5. தேவையான அளவு எண்ணெய்
  6. தேவையான அளவு தண்ணீர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    250 கிராம் கோதுமை மாவுடன் 2 டேபிள்ஸ்பூன் ரவையை சேர்த்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்

  3. 3

    அடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவை நன்றாக கலந்து மிருதுவான உருண்டையாக வரும் வரை நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்

  4. 4

    மாவு காய்ந்து போகாமல் இருப்பதற்காக ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணையை அதன் மேலே எல்லா புறமும் படும்படியாக தடவி ஒரு 10 நிமிடம் ஊற விட வேண்டும்

  5. 5

    10 நிமிடம் கழித்து நாம் மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதனை நாம் வட்டவடிவமாக தேய்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்

  6. 6

    அடுத்து ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் நன்றாக சூடாகும் வரை பொறுத்திருக்கவும் சூடான பிறகு நாம் சேர்த்து வைத்துள்ள மாவில் இருந்து ஒவ்வொன்றாக எடுத்து எண்ணெயில்‌ சேர்க்க வேண்டும்

  7. 7

    எண்ணெயில் போட்டதும் பூரி மாவு எண்ணெயில் நன்றாக வெந்து மேலே உப்பி வரும் அந்த சமயத்தில் திருப்பி போடவும் இரண்டு புறமும் உப்பி பொன்னிறமாகும் வரை காத்திருக்கவும்

  8. 8

    எண்ணெயில் இருந்து எடுத்து ஒரு வடிதட்டில் வைத்து எண்ணெய் வடிய விடவும்

  9. 9

    இதோ‌ மிகவும்‌ ருசியான மிருதுவான பூரி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sowmya
Sowmya @vishalakshi
அன்று

Similar Recipes