எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பேர்
  1. 250 கிராம் - ஆட்டு ஈரல்
  2. தலா 1 - வெங்காயம் + தக்காளி (பெரியது)
  3. 2- பச்சை மிளகாய் + கறி வேப்பிலை+ புதினா+ கொத்தமல்லி சிறிதளவு
  4. தலா ¼ தேக்கரண்டி - மஞ்சள்தூள் + சீரகத்தூள்
  5. தலா 1 தேக்கரண்டி - சோம்புத் தூள் + இஞ்சி பூண்டு விழுது
  6. 1 ½ தேக்கரண்டி - கறி மசாலா தூள்
  7. 1 மேஜைக்கரண்டி - தயிர் + உப்பு தேவைக்கு ஏற்ப
  8. 2ஏலக்காய் + 1 இன்ச் பட்டை
  9. 2 மேஜைக்கரண்டி - தேங்காய் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறி வேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்

  2. 2

    வெங்காயம் கண்ணாடி போல் ஆனதும் இஞ்சி பூண்டு விழுது, தயிர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்

  3. 3

    பின்பு தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.தக்காளி மசிந்து வரும் வரை மூடிப் போட்டு வைக்கவும்.

  4. 4

    தக்காளி மசிந்து பச்சை வாசனை போனதும் மஞ்சள் தூள், சீரகத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  5. 5

    மேலும் சோம்புத் தூள், கறி மசாலா தூள் சேர்க்கவும் உடனே நன்கு கழுவிய ஈரல் துண்டுகளையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

  6. 6

    ஐந்து நிமிடம் கழித்து புதினா இலை சேர்த்து விட்டு அடுப்பை அணைத்து விடவும்.ஆட்டு ஈரல் குலம்பு தயார். பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றியப் பின் மல்லி இலை சேர்த்து பரிமாறவும்.

  7. 7

    ருசியானது மட்டும் இல்லை இந்த ஆட்டு ஈரல் குலம்பு,ரெம்பவும் ஆரோக்கியமானதும் கூட. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.முக்கியமாக பூப்பெய்திய பெண்கள், குழந்தைப் பெற்றெடுத்த தாய்மார்கள் மற்றும் இரத்த அளவு எண்ணிக்கை குறைவாக உள்ள பெண்களுக்கு மிகவும் ஏற்றது இந்த ஆட்டு ஈரல் குலம்பு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl
அன்று

Similar Recipes