வாழைப்பழ ஹல்வா

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl

வாழைப்பழ ஹல்வா

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. 2-வாழைப்பழங்கள்(செவ்வாழை பயன்படுத்தினால் இன்னும் சிறப்பு)
  2. 10- பாதாம் பருப்பு நறுக்கியது
  3. 1 கப் - பால்
  4. 2 மேஜைக்கரண்டி - பால் கோவா
  5. 2 ½ மேஜைக்கரண்டி - சர்க்கரை
  6. 1 ½ தேக்கரண்டி - ஏலக்காய்த்தூள்
  7. 3 மேஜைக்கரண்டி - நெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு அகன்ற பாத்திரத்தில் 2 மேஜைக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய பாதாம் துண்டுகளை வறுத்து எடுக்கவும்.ஒரு கின்னத்தில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    பின்பு அதே பாத்திரத்தில் சிறிய துண்டுகளாக்கப்பட்ட செவ்வாழை பழத்தை சேர்க்கவும் இத்துடன் சர்க்கரையும் சேர்த்து நன்றாக கிளறவும்.(அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிடவும்.)

  3. 3

    வாழைப்பழம் நன்றாக மசிந்ததும், பால் கோவாவை சேர்த்து கிளறவும். இத்துடன் 1 கப் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் 1 சொட்டு புட்(மஞ்சள்) கலர் சேர்க்கவும்.

  4. 4

    இக்கலவை கெட்டியாகும் நேரத்தில் 1 ½ தேக்கரண்டி ஏலப்பொடி மற்றும் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறவும். பக்கவாட்டில் நெய் விட்டுக் கொண்டு வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.இதற்கு மேல் வறுத்து எடுத்த பாதாம் பருப்பு துண்டுகளை தூவி பரிமாறவும்.

  5. 5

    செவ்வாழை உடலுக்கு மிகவும் நல்லது.
    நான் இதில் இனிப்பு கலந்த பால் கோவா சேர்த்ததினால் சர்க்கரை அளவு குறைவாக உள்ளது.
    வெறும் கோவா சேர்த்தால் நீங்கள் சர்க்கரை அளவைக் கூட்டிக் கொள்ளலாம். மிகவும் சுவையாக இருந்தது இந்த வாழைப்பழ ஹல்வா.ஆரோக்கியமானதும் கூட.வாழைப்பழம் சாப்பிடாத குழந்தைகள் முதற்கொண்டு இந்த ஹல்வாவை வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl
அன்று

கமெண்ட் (8)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
Hello dear 🙋
All your recipes are yummy & delicious . You can check my profile and like, comment, follow me if u wish 😊😊

Similar Recipes