சுண்ட வத்தல் குழம்பு sunda vatthal kulambu recipe in tamil

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

சுண்ட வத்தல் குழம்பு sunda vatthal kulambu recipe in tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 100 கி சுண்டவத்தல்
  2. 15 சின்ன வெங்காயம்
  3. 20 பல் பூண்டு
  4. 2 தக்காளி
  5. 20 பல் வத்தல்
  6. 1 pinch பெருங்காயத்தூள்
  7. 1 ஸ்பூன் சீரகம்
  8. 1/2 ஸ்பூன் கடுகு
  9. 1/2 ஸ்பூன் மிளகு
  10. 1/2 ஸ்பூன் வெந்தயம்
  11. 1 சின்ன அளவு வெல்லம்
  12. பெரிய நெல்லிக்காய் அளவு புளி
  13. கைப்பிடி அளவு கருவேப்பிள்ளை, கொத்த மல்லி
  14. தேவைக்கேற்ப எண்ணெய், உப்பு, தண்ணீர்
  15. 1 ஸ்பூன் வீட்டில் அரைத்த குழம்பு மிளகாய்த் தூள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    தேவையானப் பொருள்களை எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    சுண்ட வத்தலில் தூசிக்களும் உப்பும் அதிகப்படியாக இருக்கும் எனவே அதை தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளவும் புளியை தண்ணீரில் ஊறப்போட்டு கரைத்துக் கொள்ளவும்

  3. 3

    ஒருக்கடாயில் தேவைக்கேற்ப நல்லெண்ணெய்ச் சேர்த்துக் கொள்ளவும் பின் அதில் 1 ஸ்பூன் சீரகம், 1/2 ஸ்பூன் வெந்தயம்

  4. 4

    மற்றும் 1/2 ஸ்பூன் கடுகு, 1/2 ஸ்பூன் மிளகுச் (இடித்துக் கொள்ளவும்) சேர்த்துக் கொள்ளவும் கடுகு வெடித்ததும் கருவேப்பிள்ளைச் சேர்த்துக் கொள்ளவும்

  5. 5

    பின் அடுத்ததாக 1 வத்தல், 20 பல் பூண்டு, 15 சின்ன வெங்காயம்ச் சேர்த்து வதக்கவும்

  6. 6

    வதங்கியதும் தக்காளியைச் சேர்த்துக் கொண்டு தேவைக்கேற்ப உப்புச் சேர்க்கவும் பிறகு வீட்டில் அரைத்த குழம்பு மசால்த்தூள் 1 ஸ்பூன்ச் சேர்க்கவும்

  7. 7

    பின் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதில் 1 inch அளவு வெல்லம் மற்றும் 1 pinch பொருங்காயத்தூள்ச் சேர்த்துக் கொள்ளவும் பின் சுண்ட வத்தலைச் சேர்த்து வேக விடவும்

  8. 8

    தண்ணீர் வற்றி வரும் போது கரைத்து வைத்த புளிக்கரைசலைச் சேர்க்கவும் பின் நன்றாக எண்ணெய் பிரிந்து வரும்வரைக் கொதிக்க வைக்கவும்

  9. 9

    கொதித்து வந்ததும் மல்லி இலைத்தூவி இறக்கவும்

  10. 10

    சுவையான சுண்ட வத்தக் குழம்பு தயார் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes