உருளை கிழங்கு வெள்ளை குருமா potato white kurma recipe in tamil

Jayanthi Jayaraman
Jayanthi Jayaraman @Jayanthi1979

உருளை கிழங்கு வெள்ளை குருமா potato white kurma recipe in tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 மணி நேரம்
4 பேர்
  1. 1உருளை கிழங்கு
  2. சிறியவெங்காயம் 10
  3. 4பச்சை மிளகாய்
  4. இஞ்சி சிறிய துண்டு
  5. 1/4 மூடிதேங்காய்
  6. 6 பல்பூண்டு
  7. 2 டீஸ்பூன்சோம்பு
  8. வெறும் கடாயில் வறுத்து அரைக்க
  9. 2 ஸ்பூன்பொட்டு கடலை
  10. 1/4 மூடிதேங்காய்
  11. 1 ஸ்பூன்கசகசா
  12. தாளிக்க
  13. 2 டீஸ்பூன்கடுகு
  14. சிறிதுகருவேப்பிலை
  15. எண்ணெய்
  16. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

30 மணி நேரம்
  1. 1

    முதலில் உருளையை சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் வேகவைத்து எடுக்கவும் பின்பு வெங்காயம் இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் பொடியாக நறுக்கி வைக்கவும்

  2. 2

    பிறகு வெறும் கடாயில் எண்ணெய் இல்லாமல் பொட்டு கடலை கசகசாயை மிதமாக வறுத்து எடுக்கவும்.பிறகு தேங்காய் துருவலை வதக்கி எடுக்கவும்.

  3. 3

    பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு வெங்காயம் இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி எடுக்கவும்

  4. 4

    பிறகு ஒரு மிக்ஸியில் தேங்காய் பொட்டு கடலை கசகசாயை பாதியாக அரைத்துக் கொண்டு அதில் சோம்பு வெங்காயம் இஞ்சி பூண்டு பச்சைமிளகாயை சேர்த்து அனைத்தையும் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.நைசாக வேண்டாம்.

  5. 5

    பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்் கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும் பிறகு அரைத்த விழுதை இதில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து வேகவிடவும் அத்துடன் வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்க்கவும் 10 நிமிடம் கழித்து இறக்கவும்.இதனை இட்லி தோசையுடன் சேர்த்து பரிமாறவும் சுவையான உருளை கிழங்கை வெள்ளை குருமா ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Jayanthi Jayaraman
Jayanthi Jayaraman @Jayanthi1979
அன்று

Similar Recipes