எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1/4 கிகத்தரிக்காய்
  2. 20வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 1பச்சை மிளகாய்
  5. 3பூண்டு
  6. 1ஸ்பூன்சீரகம்,சோம்பு,வெந்தயம்
  7. மஞ்சள் தூள்,குழம்பு மசால் தூள் தேவைக்கேற்ப
  8. புளி (நெல்லிக்காய் அளவு)
  9. கருவேப்பிள்ளை,கொத்தமல்லி சிறிதளவு
  10. உப்பு,தண்ணீர்,எண்ணெய் தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    தேவையானப்பொருள்களை எடுத்து வைத்துக் கொள்ளவும் வெங்காயத்தில் 10 ஐ மட்டும் நறுக்கிக் கொள்ளவும் தாளிப்பதற்காக

  2. 2

    புளியை நன்றாக கரைத்து எடுத்துக் கொள்ளவும் கத்தரிக்காயை படத்தில் காட்டியவாறு கீரிக்கொள்ளவும்

  3. 3

    ஒருக்கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும் அதில் கத்தரிக்காய்களைச் சேர்க்கவும் தெரிக்கும் என்பதால் மூடிக்கொள்ளவும்

  4. 4

    கத்தரிக்காய் படத்தில் உள்ள பதம் வரும் வரையில் திறந்து பிரட்டி விட்டுக் கொண்டே இருக்கவும்

  5. 5

    பின் அதே எண்ணெயில் வெங்காயம்,பூண்டு,பச்சை மிளகாய்,சீரகம்,சோம்பு, மஞ்சள்தூள்,குழம்பு மசால்த் தூள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும்

  6. 6

    பின் கொத்தமல்லி மற்றும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும் இக்கலவை ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்

  7. 7

    பின் கலவையை அரைத்துக் கொள்ளவும் அரைத்த கலவைகளை கத்தரிக்காய்களுக்குள் ஸ்டப் செய்துக் கொள்ளவும்

  8. 8

    பின்பு கடாயில் ஏண்ணெய் ஊற்றி வெந்தயம் நறுக்கிய வெங்காயம்,கருவேப்பிள்ளைச் சேர்த்து சிறிது உப்புச் சேர்த்து வதக்கவும் பின் அரைத்தக்கலவையை சேர்த்துக் கொள்ளவும் அதில் எண்ணெய்ப்பிரியும் விடவும்

  9. 9

    எண்ணெய்ப்பிரியவும் அதில் கத்தரிக்காய்களைச் சேர்க்கவும் பின் ஜாரில் மிதமுள்ள மசாலாக்களை மட்டும் தண்ணீர்ச் சேர்த்து ஊற்றிக்கொள்ளவும் நன்றாகக் கொதித்ததும் புளிக்கரைசலைச் சேர்க்கவும்

  10. 10

    அனைத்தும் நன்றாக கொதித்து வற்றும் போது எண்ணெய்ப்பிரிந்து வரும் அப்போது இறக்கிப் பரிமாறவும் சுவையான எண்ணெய் கத்தரிக்காய குழம்பு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes