கல்யாண வீட்டு வத்தல் குழம்பு

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

கல்யாண வீட்டு வத்தல் குழம்பு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1/4கப் சுண்டைக்காய் வத்தல்
  2. 1/2கப் சின்ன வெங்காயம்
  3. 6பல் பூண்டு
  4. சிறிதளவுகறிவேப்பிலை
  5. எலுமிச்சை பழ அளவு புளி
  6. 3ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
  7. தேவையான அளவு உப்பு
  8. தேவையான அளவு தண்ணீர்
  9. 1/4கப் தேங்காய் துருவல்
  10. 1 1/2ஸ்பூன் சீரகம்
  11. 1/4ஸ்பூன் வெந்தயம்
  12. 2குழிக்கரண்டி நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    மண்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற்றி காய்ந்ததும் சீரகம், வெந்தயம் தாளித்து கறிவேப்பிலை சேர்க்கவும்.

  2. 2

    பிறகு இதில் சுண்டைக்காய் வத்தல் சேர்த்து சிறிது நேரம் வதக்கி பின் பூண்டு பல் நறுக்கியது சேர்த்து வதக்கவும்.

  3. 3

    சின்ன வெங்காயம் சிறிதாக நறுக்கியது சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.பிறகு குழம்பு தூள் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைசலை வடிகட்டி எடுத்து இதில் ஊற்றி கலந்து விடவும்.மிக்ஸியில் தேங்காய் துருவல்,2 சின்ன வெங்காயம், 1/2ஸ்பூன் சீரகம் சேர்த்து தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் அரைத்து எடுத்து கொள்ளவும்.

  5. 5

    குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் வந்ததும் தேங்காய் பேஸ்ட் ஐ ஊற்றி கலந்து விடவும்.குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

  6. 6

    சூப்பரான கல்யாண வீட்டு வத்தல் குழம்பு தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes