மீந்தசாதத்தில் பக்கோடா (rice pakoda recipe in tamil)

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

#npd2
மீந்த பண்டம்

மீந்தசாதத்தில் பக்கோடா (rice pakoda recipe in tamil)

#npd2
மீந்த பண்டம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1 கப் மீந்த சாதம்
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 1 பச்சை மிளகாய்
  4. 1 inch இஞ்சி
  5. 8 பூண்டு
  6. 1 ஸ்பூன் மிளகாய்த் தூள்
  7. 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  8. 3 ஸ்பூன் கடலை மாவு
  9. 1 ஸ்பூன் அரிசி மாவு
  10. 1 கொத்து மல்லி இலை
  11. 3 கொத்து கருவேப்பிள்ளை
  12. 1 பச்சை மிளகாய்
  13. தேவைக்கேற்ப உப்பு
  14. பொறிப்பிற்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    1 வெங்காயம், 1 பச்சை மிளகாய், 1 inch இஞ்சி, 8 பூண்டு, 1கொத்து மல்லி இலையை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்

  2. 2

    ஒருப் பாத்திரத்தில் 1 கப் சாதத்தை பிசைத்து வைத்துக் கொள்ளவும் மிதமாக போதுமானது உருண்டை பிடிக்கும் அளவு

  3. 3

    பிசைந்து வைத்த சாதத்தில் நறுக்கிய 1 வெங்காயம், 1 inch இஞ்சி, 8 பூண்டுச் சேர்க்கவும்

  4. 4

    பின் 1 பச்சை மிளகாய் 1 ஸ்பூன் மிளகாய்த்தூள், 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள்ச் சேர்த்து பிசைந்து விடவும்

  5. 5

    பிறகு கலவை வலுவாக உடையாமல் இருக்க 3 ஸ்பூன் கடலைமாவு, 1 ஸ்பூன் அரிசி மாவுச் சேர்த்து உப்புச் சேர்த்து பிசையவும்

  6. 6

    உருண்டை பிடிக்கும் அளவிற்கு மட்டும் பிசையவும்

  7. 7

    பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காயவும் சிறிது சிறிதாக இடவும் சிறிது நேரத்தில் பொறிந்து சிவந்து வரும்

  8. 8

    பின் சூடாக பரிமாறவும் rice pakkoada தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes