பாஸ்மதி ரைஸ் பிளைன் பிரியாணி(basmathi rice plain biryani recipe in tamil)

Saheelajaleel Abdul Jaleel
Saheelajaleel Abdul Jaleel @saheekitchen

பாஸ்மதி ரைஸ் பிளைன் பிரியாணி(basmathi rice plain biryani recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி
4 பேர்
  1. 1/2 கிலோபாஸ்மதி ரைஸ்
  2. 2ஸ்பூன்ஆயில்
  3. 2ஸ்பூன்நெய்
  4. 2துண்டுபட்டை
  5. 3எண்ஏலக்காய்
  6. 3எண்கிராம்பு
  7. 1எண்ஜவித்ரி
  8. 1/4ஸ்பூன்சோம்பு
  9. 1அன்னாசி பூ
  10. 200கிராம்பல்லாரி வெங்காயம்
  11. 2பச்சை மிளகாய்-
  12. 200கிராம்தக்காளி
  13. அரை கப்தயிர்
  14. ஒரு கைப்பிடிமல்லி இலை
  15. தேவையான அளவுஉப்பு
  16. 1ஸ்பூன்கரம் மசாலாத்தூள்
  17. 1 ஸ்பூன்மிளகாய் தூள்
  18. 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  19. 25 கிராம்மீல் மேக்கர்
  20. 10 எண்முந்திரிப் பருப்பு

சமையல் குறிப்புகள்

1மணி
  1. 1

    ஒரு பாத்திரத்தில் அரிசியை சேர்த்து இரண்டு முறை கழுவி நீர் ஊற்றி ஊற விடவும் கடாய்ஆயில் சேர்க்கவும் ஆயில் சூடானவுடன் எடுத்து வைத்துள்ள பட்டை கிராம்பு ஏலம் ஜாவித்ரி அன்னாசிப்பூ இவை அனைத்தையும் சேர்த்து சோம்பு சேர்த்து நன்கு வதக்கவும்

  2. 2

    பிறகு பல்லாரி வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் அதனுடன் மல்லி இலை சேர்க்கவும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்

  3. 3

    நன்கு கலந்து விடவும் தக்காளியை மிக்ஸியில் முக்கால் பதமாக போட்டு எடுத்து அதையும் சேர்க்கவும்

  4. 4

    அதனுடன் தயிர் சேர்க்கவும் பிறகு மிளகாய்த்தூள் கரம்மசாலா தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்

  5. 5

    நன்கு கிளறி தண்ணீர் கொதித்தவுடன் ஊற வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்க்கவும்

  6. 6

    அதனுடன் மீல் மேக்கர்(மீல்மேக்கரை கொதிக்கவிடவும் பிறகு சூடு ஆறின தண்ணீரில் வடித்துக் கொள்ளவும்) வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு சேர்த்து கிளறி விடவும்

  7. 7

    மூடி வைத்து சிறு தீயில் வேகவிடவும் இடையில் திறந்து உப்பு காரம் பார்த்து புளிப்புச்சுவை தேவைப்பட்டால் அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து கிளறிவிடவும் பிறகு மூடி வைத்து ஒரு நிமிடம் அப்படியே தம்மில் வைத்து பரிமாறவும்

  8. 8

    இப்பொழுது சுவையான பிரியாணி சூப்பராக தயாராகிவிட்டது சாப்பிடலாம் வாங்க.

  9. 9
  10. 10
எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Saheelajaleel Abdul Jaleel
அன்று

Top Search in

Similar Recipes