குக்கர் பொங்கல்(cooker pongal recipe in tamil)

Arfa
Arfa @arfa2019

#pongal 2022

குக்கர் பொங்கல்(cooker pongal recipe in tamil)

#pongal 2022

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி
4பேர்
  1. ஒரு கப்பச்சரிசி
  2. ஒரு கப்வெல்லம்
  3. அரை மூடிதேங்காய்
  4. தேவையான அளவுமுந்திரிப்பருப்பு திராட்சை
  5. சிறிதளவுஏலக்காய்த் தூள் சோம்புத் தூள்
  6. தேவையான அளவுநெய்
  7. ஒரு டம்ளர்பால்
  8. 5 ஸ்பூன்பாசிப்பருப்பு
  9. தேவையானஅளவு தண்ணீர்
  10. ஒரு பின்ச் உப்பு

சமையல் குறிப்புகள்

1மணி
  1. 1

    கடாயை அடுப்பில் வைத்து பாசிப்பருப்பை சேர்த்து வறுத்து எடுக்க வேண்டும்

  2. 2

    பாசிப்பருப்பு வரு பட்டவுடன் அரிசியை சேர்க்கவும் லேசாக கிளறி விட்டு அரிசி சூடானவுடன் இறக்கி வேறு வேறு பாத்திரத்தில் சேர்த்து ஆற விட்டு இரண்டு முறை நன்கு கழுவி ஊற வைத்துவிட வேண்டும்

  3. 3

    பிறகு அதே கடாயில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து பொடித்து வைத்துள்ள வெல்லத்தை சேர்த்து

  4. 4

    நன்கு கரைத்து கொதிக்கவிட்டு வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும் குக்கரை அடுப்பில் வைக்கவும்

  5. 5

    பாலும் தண்ணீரும் சேர்க்கவும் நன்கு கொதிக்க வைத்து எடுக்கவும்

  6. 6

    இப்போது கழுவி ஊற வைத்த அரிசி பாசிப்பருப்பை சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும் இப்போது நன்கு வந்தவுடன் நாம் வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சை சேர்க்கவும்

  7. 7

    தேங்காய்த்துருவல் சேர்க்கவும் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துள்ள வெல்லப்பாகை சேர்க்கவும் நன்கு கிளறி

  8. 8

    நெய் சேர்க்கவும் இப்போது சுவையான குக்கர் பொங்கல் தயாராகிவிட்டது சாப்பிடலாம் வாங்க...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Arfa
Arfa @arfa2019
அன்று

Similar Recipes