பெரிய வெங்காயம் உருளைக்கிழங்கு சமோசா(onion potato samosa recipe in tamil)

Rithu Home
Rithu Home @rithuhomemohana

மாலை நேர டிபன். சுலபமாக செய்யும் முறை.

#wt3

பெரிய வெங்காயம் உருளைக்கிழங்கு சமோசா(onion potato samosa recipe in tamil)

மாலை நேர டிபன். சுலபமாக செய்யும் முறை.

#wt3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி நேரம்
4நபர்கள்
  1. 200 கிராம் மைதா மாவு
  2. 1பெரிய உருளைக்கிழங்கு
  3. 15பச்சை பட்டாணி
  4. 1பெரிய வெங்காயம்
  5. 1/4டீஸ்பூன் ஓமம்
  6. 1டீஸ்பூன் நெய்
  7. 1டீஸ்பூன் மஞ்சள் தூள்.. கரம் மசாலா தூள்.. மிளகுத் தூள்
  8. தேவையானஅளவு உப்பு மல்லித்தழை
  9. தேவையான அளவுபொரிக்க எண்ணெய்
  10. 1டீஸ்பூன் சீரகம்
  11. 1டீ ஸ்பூன் இஞ்சி பூண்டு மசாலா

சமையல் குறிப்புகள்

1மணி நேரம்
  1. 1

    200 கிராம் மைதா மாவில் 1/4 ஸ்பூன் ஓமம் சேர்த்து ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 1/2மணி நேரம் வெள்ளை துணியை போட்டு ஊற வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    கடாயை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் சீரகம் போட்டு பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி போட்டு.. பச்சை பட்டாணி சேர்த்து ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.பச்சை பட்டாணி வேகும் வரை மூடி வைக்கவும்.

  3. 3

    வதக்கிய பின் ஒரு ஸ்பூன் கரம் மசாலா மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் உப்பு உருளைக்கிழங்கை வேக வைத்து பொடியாக உதிர்த்துப் போட்டு மல்லித்தழை சேர்த்து கலக்கி ரெடி செய்து கொள்ளவும்.

  4. 4

    இப்பொழுது மாவில் ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்தி பதத்திற்கு செய்து அதை இரண்டாக கட் பண்ணி முக்கோணமாக மடித்து உள்ளே உருளைக்கிழங்குவெங்காய மசாலாவை வைத்து மடித்து கொள்ளவும்..

  5. 5

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் சமோசாவை பொரித்து எடுத்துக் கொள்ளவும்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Rithu Home
Rithu Home @rithuhomemohana
அன்று
என் பெயர் மோகனா ..எனக்கு சமையல் செய்வது பிடிக்கும் ..என் வீட்டில் நான் மட்டுமே சமைப்பேன் ..நான் கொங்கு நாட்டு சமையலை அதிகமாக விரும்பி சமைப்பேன் ..எனக்கு அதிக விருப்பம் சைவத்தில் தான்.. அசைவம் சாப்பிட விருப்பம் குறைவுதான்..அசைவ உணவுகளையும் நான் சமைப்பேன் ..என் சமையலை செய்து பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி வணக்கம் ..
மேலும் படிக்க

Similar Recipes