பூரி (Poori Recipe in Tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

#WDY
அம்மாவுக்கு பிடித்தது.சாப்ட் ஆக செய்து கொடுத்து நல்லாருக்குன்னு சொல்லிட்டாங்க.வீட்ல எல்லோரும் சும்மா சாப்பிடவே நல்லாருக்குன்னு சொல்லிட்டாங்க.இதுக்கு மேல என்ன வேணும்.எனக்கும் மிகப் பிடித்த ரெசிபி.

பூரி (Poori Recipe in Tamil)

#WDY
அம்மாவுக்கு பிடித்தது.சாப்ட் ஆக செய்து கொடுத்து நல்லாருக்குன்னு சொல்லிட்டாங்க.வீட்ல எல்லோரும் சும்மா சாப்பிடவே நல்லாருக்குன்னு சொல்லிட்டாங்க.இதுக்கு மேல என்ன வேணும்.எனக்கும் மிகப் பிடித்த ரெசிபி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40நிமிடங்கள்
4பேர்
  1. 2.5கப் கோதுமை மாவு
  2. 1ஸ்பூன் ரவை
  3. 1ஸ்பூன் வெள்ளை சர்க்கரை
  4. தேவையானஅளவு உப்பு
  5. எண்ணெய், பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

40நிமிடங்கள்
  1. 1

    கோதுமை மாவில் உப்பு,சர்க்கரை,ரவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்களுக்கு பிசையவும்.

  2. 2

    சப்பாத்தி அளவுக்கு ரொம்ப மிருதுவாக பிசையக் கூடாது.பிசைந்த மாவில் 1/2ஸ்பூன் எண்ணெய் தடவி 15 -30நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.

  3. 3

    பின் மாவை3,4 துண்டுகளாக வெட்டி,ஒவ்வொரு துண்டையும் நீளமாக உருட்டி,பின் அதை சிறு சிறு சம துண்டுகளாக வெட்டி உருட்டிக் கொள்ளவும்.

  4. 4

    உருட்டிய ஒவ்வொரு உருண்டைகளையயும் மாவில் முக்கி சிறு சிறு வட்டங்களாக விரித்து விட வேண்டும்.

  5. 5

    அடுப்பில் வாணலி வைத்து,எண்ணெய் விட்டு நன்றாக காய்ந்ததும், ஒவ்வொரு வட்டங்களாக போட்டு கரண்டியால் மேலிருந்து அழுத்தி விட்டால், நன்றாக உப்பி வரும்.

    எண்ணெய் சூடாகவும்,மிதமான தீக்கும் அதிகம் வைத்து பொறிக்கவேண்டும்.

  6. 6

    அவ்வளவுதான். சுவையான உப்பலான பூரி ரெடி.

    உருளைக்கிழங்கு மசாலா அல்லது வடகறி வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.

லிங்க் செய்யப்பட்ட ரெசிபிக்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes