சிக்கன் ஷவர்மா (எமனி ஸ்டைல்)(chicken shawarma recipe in tamil)

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 ½ மணி நேரம்
5 பேர்
  1. 1 கிலோசிக்கன் - (நெஞ்சு துண்டு)
  2. 1 கப்தயிர் -
  3. ⅓ கப்எண்ணெய் -
  4. ¼ கப்எலுமிச்சை சாறு -
  5. 1 பல்பூண்டு - (சிறிய துண்டகள்)
  6. 1 மேஜைக்கரண்டிமிளகாய் தூள் -
  7. ½ மேஜைக்கரண்டிஆரிகானோ -
  8. ½ தேக்கரண்டிமஞ்சள் தூள் -
  9. 1 மேஜைக்கரண்டிமிளகு தூள் -
  10. 1 மேஜைக்கரண்டிநச்சீரகத்தூள் -
  11. ½ தேக்கரண்டிகொத்தமல்லி தூள் -
  12. 1 மேஜைக்கரண்டிவினிகர் -
  13. ½ தேக்கரண்டிவெங்காய தூள் -
  14. தேவையான அளவுஉப்பு -
  15. தேவைக்கு ஏற்ப பட்டை/ ஏலக்காய்த்தூள் -
  16. 5 துண்டுகள்பீட்டா பிரட் -
  17. தேவையான அளவுமயோனைஸ், டுமேட்டோ கெட்ச் அப் -
  18. 1பெரிய உருளைக்கிழங்கு + 2 நீண்ட குச்சிகள் + ஃபாயில் பேப்பர்

சமையல் குறிப்புகள்

1 ½ மணி நேரம்
  1. 1

    ஓர் அகன்ற பாத்திரத்தில் மேலே குறிப்பிட்ட அளவு எல்லா பொருட்களையும் சேர்த்து கலந்து பின்பு ஸ்லைஸ் செய்து வைத்த கோழி நெஞ்சு துண்டுகளை சேர்த்து கலந்து நன்றாக 40 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

  2. 2

    பெரிய உருளைக்கிழங்கு ஒன்று எடுத்து அதில் ஃபாயில் பேப்பர் சுற்றி 2 நீண்ட குத்தி வைக்கவும்.

  3. 3

    40 நிமிடங்கள் ஊற வைத்த கோழி துண்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக குச்சியில் குத்தி வைக்கவும்.இதற்கு மேலாக 2 பல்லாரி வெங்காயத்தை குத்தி வைக்கவும்.பின்பு இதை 200°© ப்ரீ ஹீட் செய்த அவனில் 200°© இல் 45 முதல் 50 நிமிடங்கள் வரை வைத்து எடுக்கவும்.

  4. 4

    இதற்கிடையில் 1 பெரிய தக்காளி, வெங்காயம், குடை மிளகாய் நீட்டாக வெட்டி ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இவற்றை சேர்த்து சிறிதளவு உப்பு மற்றும் மிளகு சேர்த்து உடனே அடுப்பை விட்டு இறக்கி விடவும்.

  5. 5

    அவனை விட்டு எடுத்த கோழி இறைச்சியை செதில் செதிலாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

  6. 6

    பீட்டா பிரட் ஒன்று எடுத்து அதில் வெண்ணெய் தடவி அதற்கு மேல் 1 தேக்கரண்டி மயோனைஸ், டுமேட்டோ கெட்ச் அப் தடவி. அத்துடன் செதுக்கிய கோழி துண்டுகள், வதக்கி ய வெங்காயம், தக்காளி,குடை மிளகாய் ஆகியவற்றை வைத்து இரண்டு பக்கமும் மடித்து மெதுவாக சுற்றி ஒரு டூத் பிக் வைத்து குத்தி விடவும்.

  7. 7

    பின்பு இதை க்ரில் போஸ்டரில் வைத்து எடுத்தால் சூவையான எமனி சிக்கன் ஷவர்மா தயார்.

  8. 8

    வெளியே வாங்கும் ஷவர்மாவை விட கூடுதல் சூவையாக இருக்கும்.வீட்டிலே செய்யும் பொழுது ஆரோக்கியமானதும் கூட.இந்த சிக்கன் ஷவர்மாவை வீட்டிலே செய்து பார்த்து அசத்துங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl
அன்று

Similar Recipes