வட்டிலப்பம்

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004

#இனிப்பு வகைகள்

வட்டிலப்பம்

#இனிப்பு வகைகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 10முட்டை
  2. ஒன்றுதேங்காய்
  3. ஒன்றரை கப்சர்க்கரை
  4. 5ஏலக்காய்
  5. கால் கப்நெய்
  6. சிறிதுமுந்திரி திராட்சை

சமையல் குறிப்புகள்

  1. 1

    தேங்காய் துருவி அரைகப் மட்டும் தண்ணீர் சேர்த்து திக்கான முதல் பால் ஒன்றரை கப் எடுக்கவும்.

  2. 2

    அந்த திக்கான பாலில் பத்து முட்டைகளை ஒவ்வொன்றாக ஊற்றி நன்றாக அடித்துக் கலக்கவும்.

  3. 3

    அதனுடன் சர்க்கரை ஏலப்பொடி சேர்த்து மீண்டும் கலக்கவும்.

  4. 4

    நெய்யை சூடாக்கி முந்திரி திராட்சை சேர்த்து வறுத்து அதையும் முட்டை.பால் கலவையில் சேர்த்து கலக்கவும்.

  5. 5

    ஒரு இட்லி பாத்திரத்தில் கால் பாகம் தண்ணீர் ஊற்றி முட்டை.தே.பால் கலவையை உள்ளே வைத்து இட்லி பாத்திரத்தை மூடி சிறு தீயில் வேக வைக்கவும்.

  6. 6

    அவ்வப்போது திறந்து தண்ணீர் வற்றாமல் கால் கப் அளவு தண்ணீர் இட்லி பாத்திரத்தில் ஊற்றி ஒரு மணி நேரம்வரை சிறு தீயில் வேக விடவும்.

  7. 7

    ஒரு மரக்குச்சியை கலவை நடுவில் விட்டு ஒட்டாத பதமாக இருந்தால் கலவையை இறக்கி ஆறியதும் துண்டுகள் போடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
அன்று

Similar Recipes